5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காட்டுக்குள் திக் திக்.. சின்ன நகக்கீறல்.. எஜமானர் சாவுக்கு காரணமான பூனை!

pet cat: பூனையின் நகக் கீறல், அதன் எஜமானரின் உயிரைக் குடித்துள்ளது. அன்று இரவு என்ன நடந்தது? இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? உயிரிழந்தவரின் மருத்துவக் அறிக்கை கூறுவது என்ன? அவரது சாவுக்கு யார் காரணம்?

காட்டுக்குள் திக் திக்.. சின்ன நகக்கீறல்.. எஜமானர் சாவுக்கு காரணமான பூனை!
பூனை கடி (விளக்க படம்)
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 29 Nov 2024 14:54 PM

கர்புறம் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும், இக்காலக் கட்டத்தில் பலர் செல்லப்பிராணிகளாக பூனை மற்றும் நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், பூனை கடித்து அதன் உரிமையாளர் உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் நவ.22ஆம் தேதி இரவு 11 மணியளவில் ரஷ்யாவில் நடந்துள்ளது. இது, அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனைக் கடிக்கு தனது இன்னுயிரை இழந்தவர் டிமிட்டி யூகின் என்ற ரஷ்யர் ஆவார். இவர் தனது வீட்டில் ஆசை ஆசையாக பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்தப் பூனை யூகின் உயிரை காவு வாங்கியுள்ளது.

இரவில் காட்டுக்கு சென்ற பூனை

பொதுவாக யூகின் வளர்த்த பூனை அடிக்கடி இரவு நேரத்தில் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளது. தொடர்ந்து, டிமிட்டி தனது பூனையை தேடி வீட்டின் அருகில் உள்ள தோட்டக் காட்டுக்குள் செல்வார். அங்கு பூனை ஏதாவது ஓர் இடத்தில் நிற்கும்.
தனது ஏஜமானரை பார்த்ததும் அவருடன் வந்துவிடும். இந்த நிலையில் அதேபோல், நவ.22 ஆம் தேதி இரவு மாயமாகியுள்ளது.

இந்தப் பூனையை தேடி டிமிட்டி சென்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த பூனை டிமிட்டியை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளது. மேலும், டிமிட்டியின் காலிலும் கடித்து வைத்துள்ளது.
இதனால் ஏற்பட்ட இரத்தப் போக்கு காரணமாக டிமிட்டி மயங்கி விழுந்தார். தொடர்ந்து, சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதையும் படிங்க :  மோனிஷா ராணியா இல்லை மோனிகா பாபியா? ஓர் பெயர் சூட்டுங்க!

எஜமானர் மரணம்

இந்நிலையில் அங்கிருந்து மீட்டு டிமிட்டியின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டிமிட்டியை பரிசோதித்த டாக்டர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த துயர சம்பவம் குறித்து பேசிய டிமிட்டி உறவினர்கள், அவருக்கு பூனை என்றால் ரொம்ப பிடிக்கும்.

எங்கள் வீட்டில் உள்ள நபர்களும் பூனைகள் மீது பாசமாக இருப்போம் என்றனர். மேலும், இப்படி ஓர் துயர சம்பத்தை தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

டிமிட்டி உயிரிழப்புக்கு என்ன காரணம்?

டிமிட்டிக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்துள்ளது. இதற்கு அவர் மருத்து எடுத்துள்ளார். இந்நிலையில் அவரின் காலில் பூனை கடித்துள்ளது. இதில் அவருக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறி உள்ளது.
மேலும் அவருக்கு ரத்த உறைதலும் ஏற்பட்டுள்ளது. இதுதான் அவரின் மரணத்துக்கு வழிவகுத்தது என மருத்துவர்கள் கூறினர். பூனை கடித்து எஜமானர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : ரீல்ஸ் மோகத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த இளம்பெண்.. பகீர் வைரல் வீடியோ!

Latest News