Viral Video : குப்பையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ்.. பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!
தூய்மை பணியாளர் | நெக்லஸ் தொலைந்துவிட்டதாக தகவல் அறிந்த அந்த நிறுவனம் அந்த பகுதியில் குப்பை சேகரித்து வந்த அந்தோணி சாமி என்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளது. உடனடியாக அந்தோணி சாமி அங்கிருந்த குப்பை தொட்டிகளில் தேடலை தொடங்கியுள்ளார். அப்போது குப்பை தொட்டியில் மலர் மாலைக்குள் கிடந்த வைர நெக்லஸை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். நகை பத்திரமாக கிடைத்ததும் நகையின் உரிமையாளர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.
குப்பையில் கிடந்த வைர நெக்லஸ் : சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் அங்கிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் நேற்று (21.07.2024), குப்பைகளுடன் சேர்த்து தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை, மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் வண்டியில் போட்டுள்ளார். பிறகு, வீட்டில் இருந்த நெக்லஸை கானவில்லை என தெரிந்ததும் தான் தவறுதலாக அதை குப்பை தொட்டியில் போட்டிருக்கலாம் என்பதை உணர்ந்த தேவராஜ், உடனடியாக அர்பேசர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். தகவல் அறிந்த அந்த நிறுவனம் அந்த பகுதியில் குப்பை சேகரித்து வந்த அந்தோணி சாமி என்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளது. உடனடியாக அந்தோணி சாமி அங்கிருந்த குப்பை தொட்டிகளில் தேடலை தொடங்கியுள்ளார். அப்போது குப்பை தொட்டியில் மலர் மாலைக்குள் கிடந்த வைர நெக்லஸை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். நகை பத்திரமாக கிடைத்ததும் நகையின் உரிமையாளர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு
நகையை குப்பை வண்டியில் போட்டுவிட்டதாக பாதிக்கப்பட்டவர் தகவல் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அவரிடம் நகை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் நகையை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த நிறுவனத்திற்கும் தூய்மை பணியாளர் அந்தோணி சாமிக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
₹5,00,000 worth diamond necklace was recovered from garbage by the conservancy team of Dn137, Zn10.#GCC appreciates @SumeetUrbaser team that helped Mr Devaraj residing in an apartment in RajamannarSalai who accidentally disposed of the necklace that was recovered from the bin. pic.twitter.com/OMR1n2Gujt
— Greater Chennai Corporation (@chennaicorp) July 21, 2024
நடந்த சம்பத்தை விவரித்த தூய்மை பணியாளர்
இந்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்தோணி சாமி, நான் தினமும் காலையில் தெருக்கலில் குப்பைகளை சேகரிப்பேன். அப்படி நான் வழக்கம் போல குப்பைகளை சேகரித்துக்கொண்டிருந்த போது, ஒருவர் என்னிடம் வந்து ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்டார். நான் ஒரு நகையை தொலைத்து விட்டேன். மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை அது. அதை தவறுதலாக குப்பை தொட்டியில் போட்டு விட்டேன். அதை தேடி கொடுக்க முடியுமா என்று கேட்டார். நான் உடனடியாக என சூப்பர்வைசரிடம் தகவலை தெரிவித்தேன் அவர் சம்பவ இடத்திற்கு வந்தார்.
ஏழ்மையிலும் நேர்மை தவறாத தூய்மை பணியாளர்
பிறகு குப்பை தொட்டியில் 2 மணி நேரம் தேடிய பிறகு நகை கிடைத்தது. நகை கிடைத்ததும் உரிமையாளர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நகை திரும்ப கிடைக்காது என நினைத்தேன். ரொம்ப நன்றி என தெரிவித்தார் என்று முழு சம்பவத்தையும் அவர் விளக்கியுள்ளார். மேலும் தனக்கு தாய் தந்தை இல்லை என்றும், இந்த தொழிலை நம்பி தான், தான் வாழ்வதாக தெரிவித்த அந்தோணி சாமி தொழிலுக்கு நேற்மையாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நிம்மதியுடம் இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியூட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.