Viral Video : பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்.. பள்ளிக்கு வெளியே அமர வைத்த நிர்வாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Uttar Pradesh | சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும்.

Viral Video : பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்.. பள்ளிக்கு வெளியே அமர வைத்த நிர்வாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

02 Oct 2024 16:05 PM

உத்தர பிரதேசத்தில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே அமர வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேதி குறிப்பிடப்படாத அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது, மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர், இந்த விவகாரம் குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்ட பள்ளி நிர்வாகம்

உத்தர பிரதேச மாநிலம், சித்தார்த்நகர் மாவட்டத்தில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவர்களிடம் இவ்வாறு கடுமையாக நடந்துக்கொண்ட பள்ளி நிர்வாகம் அந்த வீடியோவை மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதையும் படிங்க : Iran – Israel War: ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே என்னதான் பிரச்னை? போர் நடக்க என்ன காரணம்.. முழு விவரம்!

வைரல் வீடியோ குறித்து காவல்துறை அதிகாரி விளக்கம்

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், அந்த வீடியோவை நான் பார்த்தேன். அது குறித்து விளக்கமளிக்குமாறு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த பள்ளியின் மேலாளர் தான் மாணவர்களை இவ்வாறு அமர வைத்து வீடியோ எடுத்து அவர்களது பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில் உள்ள மாணவர்கள் அனைவரும் அவமானத்தால் தலை குணிந்தபடி அமர்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : Iran Attack Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா.. அதிபர் ஜோ பைடன் போட்ட உத்தரவு!

வைரல் வீடியோவில் இடம்பெற்றிருப்பது என்ன?

இணையத்தில் வைரலாகும் வீடியோவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு வெளியே அமர வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தரையில் அமர்ந்திருப்பதை வீடியோ எடுக்கும் பள்ளி மேலாளர், “பள்ளி கட்டணம் செலுத்தாதமல் உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று உங்களிடம் நான் பலமுறை கூறியுள்ளேன். அதை மீறி நீங்கள் உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் இதுதான் நிலை. நான் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் கூறும் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Crime: மகனை கொன்ற தந்தை.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. தமிழ்நாட்டை அதிர வைத்த சம்பவங்கள்!

மேலும் அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த பள்ளியின் மேலாளர், “வங்கியில் இருந்து எனக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இதற்கு எனக்கு கடனே கிடைக்க வாய்பில்லை என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்றே கடைசி நாளாக மாணவர்களை நான் பள்ளிக்குள் அனுமதிக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி கட்டணம் செலுத்தும் வரை நான் அனுமதிக்கவே மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Chennai Air Show: கலைக்கட்டும் வான் சாகச நிகழ்ச்சிகள்.. சென்னை மெரினா கடற்கரை ரெட் சோனாக அறிவிப்பு..

இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Optical Illusion : இரவில் ரகசியமாக வெளியே சென்று வந்த குழந்தை யார்.. வெறும் 5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கிறதா? காட்டுத் தீப் போல் பரவும் செய்தி.. உண்மை என்ன?
பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம் இம்ஷா ரெஹ்மான் வீடியோ வைரல்: மற்றொரு நடிகைக்கும் சிக்கல்!
Viral Video : மணமகன் ஊர்வலத்தில் திடீரென பெய்த பணமழை.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
‘இப்பிறப்பும், எப்பிறப்பும் தொடரும் இந்தப் பாசம்’.. மனைவிக்காக 4,400 கி.மீ சைக்கிள் பயணம்!
Viral Video : சரமாரியாக தாக்கிக்கொண்ட கும்பல்.. இடையில் வந்த ஆம்புலன்ஸ்.. அடுத்து நடந்தது என்ன?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?