அய்யய்யோ.. கழிவுநீர் குழாய் வெடிப்பு… மலத்தால் நிறைந்த சாலை.. வைரல் வீடியோ! - Tamil News | Sewer Pipe Explosion Road full of Human Excrement In China This Viral Video On Internet | TV9 Tamil

அய்யய்யோ.. கழிவுநீர் குழாய் வெடிப்பு… மலத்தால் நிறைந்த சாலை.. வைரல் வீடியோ!

Published: 

28 Sep 2024 17:40 PM

Viral Video : சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பயன்பாடுகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சரியமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் சீனாவில் ஏற்பட்ட கழிவுநீர் குழாய் வெடிப்பினால் மனித மலங்கள் சாலைகளில் சிதறும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அய்யய்யோ.. கழிவுநீர் குழாய் வெடிப்பு... மலத்தால் நிறைந்த சாலை.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

Follow Us On

வைரல் வீடியோ : சீனாவில் சமீபத்தில் நிறுவப்பட்ட கழிவுநீர் குழாய் அழுத்தச் சோதனையின் போது வெடித்துள்ளது. இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து அழுத்தத்தின் காரணமாக மனித மலங்கள் சுமார் 33 அடி உயரத்தில் வானத்தில் வீசியதுள்ளது. இதனால் அங்குச் சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் விசியாதால் விபத்து நேரிடும் அபாயம் அங்கு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகச் சாலைகளில் அமைக்கப்படும் கழிவுநீர் குழாய்கள் பாதுகாப்பான முறைகளில் அமைக்கப் படுவது உண்டு. தற்போது சீனாவில் ஏற்பட்ட கழிவுநீர் குழாய் வெடிப்பின் திடுக்கிடும் காரின் டேஷ்போர்டு இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

Also Read :Mpox: அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்..

இந்த விபத்தானது  குவாங்சியில் உள்ள நானிங் என்ற இடத்தில் செப்டிக் டேங்க் குழாய் வெடித்ததுள்ளது. அங்கு ஏற்பட்ட கழிவுநீர் குழாய் வெடிப்பின் விளைவாக மனித மலம் சாலை முழுவதுமாக வீசியதால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அபாயகரமான விஷயங்கள் மக்களை பதறவைத்து வருகிறது. இது போன்று பல இடங்களில் நடக்கும் கழிவுநீர் குழாய்களின் வெடிப்பால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளனர். இந்த கழிவுநீர் குழாய் வெடிப்பினால் அங்குச் சென்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை ஏறக்குறைய சிதைத்துவிடும் அளவுக்குத் தீவிரத்துடன் சாலையில் மழை போல் பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பாதசாரிகள் வழியாக ஓட்டி செல்கின்றனர் . இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை.

Also Read :Uttarpradesh Crime News: ”பள்ளிக்கு புகழ் கிடைக்கணும்” 2ம் வகுப்பு மாணவன் நரபலி.. ஆசிரியர்கள் செய்த கொடூரம்!

 

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!

 

 

 

விபத்து குறித்து சீனா அரசின் அறிக்கை :

இந்த விபத்திற்குக் காரணத்தை அந்த அந்நாட்டின் அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி கணினியின் நிறுவலை மேற்பார்வையிடும் பொறியாளர்கள் கழிவுநீர் பாதை அழுத்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகமான அழுத்தத்தின் காரணமாக அந்த கழிவுநீர் குழாய் வெடித்துள்ளது என அந்நாட்டின் அரசு தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தமாதிரியான சோதனைகள் ஒவ்வொரு குழாய் அமைப்பின் போதும் இந்தமாதிரியான அழுத்தச் சோதனை மேற்கொள்ளப் படுவதாகச் சீனா அரசு கூறியுள்ளது.

Also Read :Harsha Sai : பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் புகார்.. இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த சோதனையின் மூலம் அந்த குழாய்கள் தரமாக உள்ளதா இல்லை தரமற்று உள்ளதா எனச் சோதனைகள் மேற்கொள்ளப் படும்பொழுது சில சமயங்களை இந்த மாதிரியான தவறுகள் ஏற்படும் எனவும், இந்த மாதிரியான சோதனைகளுக்குப் பிறகு அமைக்கப்படும் குழாய்களானது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த மாதிரியான சோதனைகளின் போது சில சமயங்களில் உயிரிழப்புகளும் நேரிடும் மற்றும் விபத்துகளும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

Also Read :ட்ரீட் தர மாட்டியா? 16 வயது சிறுவனை குத்திக் கொன்ற நண்பர்கள்.. நடுரோட்டில் பயங்கரம்!

இணையத்தில் குவியும் கமெண்டுகள் :

இந்த கழிவுநீர் குழாய் வெடிப்பு குறித்து இணையத்தில் மக்கள் கருத்துகளைக் குவித்து வருகின்றனர். இந்த வீடியோவின் கீழ் மக்கள் பலரும் தனது கருத்துக்களைக் கூறியுள்ளனர் அதில் சிலர் “இது என்னடா கருமம் இதுக்கெல்லாமா சோதனை பண்ணுவிங்க” என்றும் இந்த வீடியோவின் கீழ் பல மக்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read :குஜராத்தில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version