5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது எது?.. முதியவரா அல்லது குடையா.. உங்களது பண்புகள் இவைதான்!

Personality Test | இந்த ஒளியியல் மாயை புகைப்படம் பார்ப்பதற்கு ஒரே புகைப்படம் போல தெரிந்தாலும், அதில் பல உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படத்தை முதலில் பார்ப்பதற்கு ஒரு முதியவர் இருப்பது போல தான் தோன்று. ஆனால், புகைப்படத்தை உற்று பார்த்தால் தான் அதில் இடம் பெற்றுள்ள உருவங்களை கண்டறிய முடியும்.

Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது எது?.. முதியவரா அல்லது குடையா.. உங்களது பண்புகள் இவைதான்!
ஒளியியல் மாயை புகைப்படம் (Picture Credit : The Mind Journal)
vinalin
Vinalin Sweety | Updated On: 18 Nov 2024 11:41 AM

ஒளியியல் மாயை என்பது தற்போது மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. அதாவது, இந்த ஒளியியல் மாயையில், ஒரே புகைப்படத்தில் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த புகைப்படத்தை நன்கு உற்று கவனிக்கும் போதுதான் அதில் பல உருவங்கள் அடங்கியுள்ளதை நம்மால் அறிய முடியும். அவ்வாறு அது ஒளியியல் மாயை புகைப்படம் என தெரியாமல் பார்ப்பபர்களுக்கு ஏதேனும் ஒரு உருவம் மட்டுமே தெரியும். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அவ்வாறு ஒவ்வொருவருக்கு ஒரு உருவம் தெரிவதற்கு பின் ஒரு உலவியல் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் மூலம் ஒருவரின் பண்புகளை தெரிந்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Personality Test : உங்கள் விழிகளின் நிறத்தை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என சொல்லிவிடலாம்!

ஒளியியல் மாயை புகைப்படம்

இந்த ஒளியியல் மாயை புகைப்படம் பார்ப்பதற்கு ஒரே புகைப்படம் போல தெரிந்தாலும், அதில் பல உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படத்தை முதலில் பார்ப்பதற்கு ஒரு முதியவர் இருப்பது போல தான் தோன்று. ஆனால், புகைப்படத்தை உற்று பார்த்தால் தான் அதில் இடம் பெற்றுள்ள உருவங்களை கண்டறிய முடியும். இப்போது இந்த புகைப்படத்தில் நீங்கள் முதலில் எதை பார்த்தீர்கள் என்பதை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட பண்புகளை உடையவர்கள் என்பதை கண்டறியளாம்.

முதியவரின் முகம்

இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் நீங்கள் முதலில் முதியவரின் உருவத்தை பார்த்தீர்கள் என்றால், நீங்கள் மிகவும் புத்திசாலியான நபர் என்று அர்த்தம். பிறர் அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாத நுண்ணிய தகவல்களை கூட உங்களால் மிக எளிதாக கண்டறிய முடியும். பலரால் எளிதில் கண்டறிய முடியாத நுண்ணிய தகவல்களை நீங்கள் கண்டறிந்தால் பிறர் உங்களை பாராட்டுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதுமட்டுமன்றி நீங்கள் எந்த ஒரு புதிய விஷயம் என்றாலும் அதை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : அப்பா என் ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டார்.. கியூட்டாக கம்ப்ளெயிண்ட் செய்யும் சிறுமி.. வைரலாகும் வீடியோ!

உடைந்த குடையுடன் நிற்கும் பெண்

இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் நீங்கள் முதலில் உடைந்த குடையுடன் கூடிய பெண்ணை கண்டீர்கள் என்றால், நீங்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வால் பிறரை சிரிக்க வைக்கும் தன்மை கொண்டவர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், அங்கி இருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். உங்களின் இந்த பண்பால் நீங்கள் ஒருவரை சோகத்தில் இருந்து மீட்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடையை திறக்கும் பெண்

நீங்கள் முதலில் குடையை திறக்கும் பெண்ணின் உருவத்தை கண்டீர்கள் என்றால், நீங்கள் மிகவும் உற்சாகம் மிக்க நபராக இருப்பீர்கள். நீங்கள் எப்போது நேர்மறையான சிந்தனைகளை கொண்டிருப்பீர்கள். இது உங்களை தோல்வியில் இருந்து மீண்டு எழ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் இந்த சிறப்பு குணம் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுக்கும் என்பது குறிப்புடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : இடம் இல்லாததால், ரயில் பெட்டியில் படுக்கை தயாரித்த பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பூக்கள்

இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் உள்ள பூக்களை நீங்கள் முதலில் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் மிகவும் உணர்ச்சிவசமான நபராக இருப்பீர்கள். நீங்கள் பிறரின் மன கவலைகள் மற்றும் சோகங்களை புரிந்துக்கொண்டு செயலாற்றும் தண்மை படைத்தவர்களாக இருப்பீர்கள். நீங்கள் சரியான நேரத்தில் சரியானதை பேசும் தண்மை கொண்டவர்கள். நீங்கள் பிறரை பாதுகாப்பாகவும், நம்பிக்கையாகவும் உணர வைப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News