Viral Video : ஹிஜாப் எதிர்ப்பு.. அரை நிர்வாண போராட்டம் நடத்திய இளம் பெண் கைது!
Hijab Rules | ஈரானில் இஸ்லாமிய பெண்கள் கட்டாயம் ஹிஜாய் அணிய வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. பொதுவாகவே, இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிகள் பின்பற்றப்படுகின்றன.
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல்கலைக்கழக மாணவி ஒருவர் உடைகளை களைந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் அரை நிர்வாண கோலத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி, பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விசாரணை வலயத்தில் உள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முழு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
When Iranian police attacked a girl at Tehran University for not following the hijab rule, she removed her clothing and sat in protest. She has since been arrested by IRGC intelligence and taken to an unknown location.
— Habib Khan (@HabibKhanT) November 2, 2024
பெண்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தும் இஸ்லாமிய நாடுகள்
ஈரானில் இஸ்லாமிய பெண்கள் கட்டாயம் ஹிஜாய் அணிய வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. பொதுவாகவே, இஸ்லாமிய நாடுகளில் அந்த நாட்டு பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டு, கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிகள் பின்பற்றப்படுகின்றன. தங்கள் மரபுகளில் ஹிஜாப் அணிவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இஸ்லாமிய நாடுகள் அவற்றை தீவிரமாக கடைபிடிக்கின்றன. இவ்வாறு ஹிஜாப் அணிவதற்கு பெரும்பாலான பெண்கள் விருப்பம் தெரிவித்தாலும் சில பெண்கள் அதற்கு எதிராக உள்ளனர்.
ஹிஜாபுக்கு எதிராக ஈரானில் வெடிக்கும் போராட்டங்கள்
ஹிஜாப் அணிய சொல்லி கட்டாயப்படுத்துவது, ஆடை சுதந்திரத்திற்கு எதிரானது என அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ஈரானில், ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டாய விதிக்கு கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்து வரும் நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரானின் இஸ்லாமிக் அசாத் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், தனது மேலாடைகளை களைந்து அறை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க : Viral Video : கணவனின் ரத்தம் படிந்த படுக்கை.. மனைவியை வைத்து சுத்தம் செய்த மருத்துவமனை!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் பலகலைக்கழ நுழைவு வாயிலில் ஆடைகளை களைந்து அரை நிர்வாணமாக அமர்ந்திருக்கிறார். மாணவி அரை நிர்வாணமாக அமர்ந்திருக்கும் தகவல் அறிந்து அங்கு வரும் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அந்த மாணவியை உடைகள் அணியுமாறும், அந்த இடத்தில் இருந்து விலகி செல்லுமாறும் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாத அந்த இளம் பெண் பிடிவாதமாக அங்கே அமர்ந்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி பல்கலைக்கழ நிர்வாகத்தினரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் அறை நிர்வாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் மன அழுத்தத்தில் இருப்பதாக காவல்நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த இளம் பெண் கடந்த சில நாட்களாகவே மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இடம் இல்லாததால், ரயில் பெட்டியில் படுக்கை தயாரித்த பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஈரானின் கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாண போராட்டம் நடத்திய இளம் பெண் காவல் கண்காணிப்பில் உள்ள நிலையில், அவரை விடுவிக்க கோரி ஈரான் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அந்த பெண்ணுக்கு ஆதாரவாக சமூக ஊடகங்களிலும் குரல் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.