Viral Video: சினிமா பாணியில் நடந்த சம்பவம்.. உயிரை பணையம் வைத்து மணமகன் செய்த செயல்.. வைரல் வீடியோ!

Watch Video : உத்தர பிரதேச மாநிலத்தில் மணமகன் கழுத்தில் இருந்த ரூபாய் நோட்டு மாலையை பறித்து கொண்டு ஓட்டுநர் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்யாணத்தை மறந்துவிட்டு ரூபாய் நோட்டுகளை பறித்து சென்ற ஓட்டுநரை துரத்தி சென்று மணமகன் ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video: சினிமா பாணியில் நடந்த சம்பவம்.. உயிரை பணையம் வைத்து மணமகன் செய்த செயல்.. வைரல் வீடியோ!

வீடியோ காட்சி

Updated On: 

25 Nov 2024 17:38 PM

உத்தர பிரதேச மாநிலத்தில் மணமகன் கழுத்தில் இருந்த ரூபாய் நோட்டு மாலையை பறித்து கொண்டு ஓட்டுநர் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்யாணத்தை மறந்துவிட்டு ரூபாய் நோட்டுகளை பறித்து சென்ற ஓட்டுநரை துரத்தி சென்று மணமகன் ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணங்களில் பல முறைகள் கடைபிடிக்கப்படும். குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் திருமணங்கள் வித்தியாசமானதாக இருக்கும். அங்கு மாப்பிள்ளைக்கு பல மரியாதை செய்யப்படும். மாப்பிள்ளையை கார், குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்வது வழக்கம்.

உயிரை பணையம் வைத்து மணமகன் செய்த செயல்

அப்படி தான் உத்தர பிரதேச மாநிலத்தில் குத்திரையில் அழைத்து சென்ற மணமகனுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் மணமகனுக்கு திருமண ஊர்வலம் நடந்தது. மணமகன் குதிரையில் அமர்ந்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் கழுத்தில் பண மாலை அணிந்திருந்தார். அப்போது அவ்வழியில் ஒரு மினி லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதில் இருந்த ஓட்டுநர், மணமகன் கழுத்தில் அணிந்திருந்த பண மாலையை பறித்து சென்றிருக்கிறார்.

இதனால் அவர் திருமணத்தை மறந்துவிட்டு, அந்த மினி லாரி ஓட்டுநரை  துரத்தி சென்றிருக்கிறார். அந்த வாகனத்தில் ஜன்னல் வழியாக  வாகனத்தின் கதவில் தொங்கிக் கொண்டு பண மாலையை திருடிய நபரிடம் வண்டியை நிறுத்த சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

Also Read : உணவகத்தின் வாசலில் 30 நிமிடம் காத்திருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ


அவர் நிறுத்தாததால் சினிமா பானியில் உள்ளே புகுந்து  வண்டியை நிறுத்து சொல்லி இருக்கிறார். ஓட்டுநரும் வண்டியை நிறுத்திய உடன் அவரை சரமாரியாக  தாக்கி அவரிடம் பண மாலையை மீட்டார் .  பின்னர், மணமகனின் உறவினர்களும் ஓட்டுநரை கடுமையாக தாக்கி உள்ளனர். ஆனால் இதுகுறித்து அவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் மணமகன்  வாகனத்தில் கதவில் தொங்கிக் கொண்டு செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.  மேலும் வாகனத்தின் ஜன்னல் உள்ளே நுழைந்து பண மாலையை மீட்கும் காட்சிகளும் வெளியாகி  உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Also Read : ‘டாஸ்மாக் செல்வேன், நான் குடிகாரன் இல்லை’: மது பிரியரின் வைரல் பேட்டி

ஓட்டுநர் மணமகனிடம் தனக்கு திருடும் எண்ணம் இல்லை என்றும், தவறாக பண மாலையை எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.  இந்த வீடியோ வைரலானதை அடுத்து,  நெட்சன்கள் பலர் மிகவும் தைரியமான செயல் என்றும்,  இதுபோன்று  செய்வது உயிருக்கு ஆபத்தானது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?