5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டும் ஐஏஎஸ் அதிகாரியின் தாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Accused IAS Officer | ஐஏஎஸ் பயிற்சி பெற்று வரும் பெண் அதிகாரி பூஜா கேத்தர் மீது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஊனமுற்றோர் ஒதுக்கீட்டில் இருந்து சலுகைகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது தாய் துப்பாக்கியை வைத்து பொதுமக்களை மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டும் ஐஏஎஸ் அதிகாரியின் தாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
துப்பாக்கியுடம் மிரட்டும் மனோரமா
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 13 Jul 2024 13:29 PM

வைரல் வீடியோ : இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஊனமுற்றோர் ஒதுக்கீட்டில் இருந்து சலுகைகளை தவறாக பயன்படுத்தியதாக ஐஏஎஸ் பயிற்சி பெற்று வரும் பெண் அதிகாரி பூஜா கேத்தர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து பூஜா கேத்தர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஐஏஎஸ் அதிகாரியாவதற்கு முன்பாகவே பல்வேறு வசதிகளை கேட்டதாகவும் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், பூஜா கேத்தரின் தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் வீடியோ வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ

புனே மாவட்டம், முல்ஷி தாலுகாவில் உள்ள கிராம மக்களை பயிற்சி பெற்று வரும் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்தரின் தாயார் மனோரமா துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி சமூக வளைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலையில், பூஜா கேத்தர் மீது மோசடி புகார்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.

 மனோரமா மீது வழக்கு பதிவு

இந்த விவகாரம் குறித்த தகவல் அறிந்த மாநில காவல்துறை தலைமையகத்தை எட்டிய நிலையில், புனே கிராமப்புற காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்த விவரங்களை கேட்டுள்ளதாக டிஜிபி ரம்மி சுக்லா தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் குறித்து ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் மனோரமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நில விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மனோரமா?

இந்த சம்பவம் நில பிரச்னையின் காரணமாக ஏற்பட்டது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதாவது பாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பசல்கர் குடும்பத்திற்கு சொந்தமான நிலம் இருந்துள்ளது. அவர் அதை ஒரு மார்கேல் குடும்பத்திற்கு விற்றுள்ளார். அதை அவர் ஜைனர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

இதையும் படிங்க : Flight Accident: 297 பயணிகள்.. திடீரென தீப்பிடித்த விமானம்.. பரபர சம்பவம்!

ஆதாரங்களின்படி, இந்த நில விவகாரம் குறித்து குல்தீப் பசல்கருக்கும், மனோரமாவுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் தான் அந்த வீடியோ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எந்த தகவலும் இடம்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரையும் வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Latest News