5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : அமிதாப் பச்சனின் காலில் விழுந்த ரஜினி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Rajinkanth Viral Video | ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சென்ட் திருமணத்தை தொடர்ந்து, நேற்று (ஜூலை 13 ஆம் தேதி) சுப ஆசீர்வாத நிகழ்வும், இன்று (ஜூலை 14 ஆம் தேதி) திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் காலில் விழ முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : அமிதாப் பச்சனின் காலில் விழுந்த ரஜினி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
அமிதாப் பச்சனின் காலில் விழும் ரஜினி.
vinalin
Vinalin Sweety | Updated On: 14 Jul 2024 14:55 PM

அமிதாப் பச்சனின் காலில் விழுந்த ரஜினி : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், வீரேன் மெர்சென்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தை தொடர்ந்து நேற்று (ஜூலை 13 ஆம் தேதி) சுப ஆசீர்வாத நிகழ்வும், இன்று (ஜூலை 14 ஆம் தேதி) திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளில் இந்திய சினிமாவின் முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமன்றி பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வழங்கினார். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் காலில் விழ முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் நடந்தது என்ன?

அந்த வீடியோவில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சென்ட் திருமண விழாவில் ஒருவறை ஒருவர் சந்திக்கும் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் வாஞ்சையுடன் ஒருவறை ஒருவர் வரவேற்கின்றனர். பிறகு மரியாதையின் நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த், அமிதாம் பச்சனின் காலில் விழ முயற்சிக்கிறார். அதை உணர்ந்த அமிதாப் பச்சன், காலில் விழச் சென்ற ரஜினிகாந்தை தடுத்து நிறுத்தி, அவரை கட்டி அணைத்துக்கொண்டார். பிறகு இருவரும் தங்கள் உரையாடலை தொடரும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

இணையத்தில் வைரலான வீடியோ

இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே வைரலாக தொடங்கியது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அமிதாப் பச்சன் – ரஜினிகாந்துக்கு இடையே உள்ள உறவு குறித்து உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)

ஆனந்த் அம்பானியுடன் வேட்டி சட்டையில் நடனமாடிய ரஜினிகாந்த்

முன்னதாக மனைவி, மகள் செள்ந்தர்யா, மருமகன், பேரபிள்ளை ஆகியோருடன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், மனமகன் ஆனந்த் அம்பானியுடன் வேட்டி சட்டையில் நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Anant Radhika Wedding: ரஜினி முதல் ஜான் சீனா வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்ற தென்னிந்திய பிரபலங்கள்

அதுமட்டுமன்றி தென்னிந்திய சினிமா சார்பில் நடிகர்கள் சூரியா- ஜோதிகா, இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா, இயக்குநர் விக்னேஷ் ஷிவன் மற்றும் நயந்தாரா ஆகியோர் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்ற புகைப்படங்களும் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News