5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த ஜோடி.. வலுக்கும் கண்டம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Couple Atrocity | டெல்லியின், மிகவும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதி தான் விசாகபுரி. இங்குள்ள மேம்பாலத்தில் காதல் ஜோடி இருவர் இரு சக்கர வாகனத்தில் ரொமான்ஸ் செய்தபடி பயணம் செய்கின்றனர். பொதுமக்கள் மற்றும் சாலை விதிகளை சற்றும் கண்டுக்கொள்ளாத அந்த காதல் ஜோடி உல்லாசமாக பைக்கில் வளம் வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Viral Video : ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த ஜோடி.. வலுக்கும் கண்டம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 16 Sep 2024 16:19 PM

ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த ஜோடி : ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த செய்த காதல் ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வாகன போக்குவரத்து அதிகம் மிகுந்த சாலையில், தலையில் ஹெல்மட் அணியாமல் எந்த வித பாதுகாப்பும் இன்றி காதல் ஜோடி இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக நடந்துக்கொண்ட இந்த காதல் ஜோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த முழு தகவலை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Attack on Trump : டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி.. பரபரப்பில் அமெரிக்க அரசியல் களம்!

இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியின், மிகவும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதி தான் விசாகபுரி. இங்குள்ள மேம்பாலத்தில் காதல் ஜோடி இருவர் இரு சக்கர வாகனத்தில் ரொமான்ஸ் செய்தபடி பயணம் செய்கின்றனர். பொதுமக்கள் மற்றும் சாலை விதிகளை சற்றும் கண்டுக்கொள்ளாத அந்த காதல் ஜோடி உல்லாசமாக பைக்கில் வளம் வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பொதுமக்களுக்கு எரிச்சல் அளிக்கும் விதமாக சேட்டை செய்த காதல் ஜோடி

இணையத்தில் வைரலாகு அந்த வீடியோவில், ஒரு இரு சக்கர வாகனத்தில் காதலர்கள் இருவர் பயனிக்கின்றனர். அந்த பைக்கை ஆண் நண்பர் ஓட்ட, பெண் ஒருவர் அந்த ஆணுக்கு முன்னால் அமர்ந்துக்கொண்டு அந்த ஆணை கட்டுபிடித்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி, சாலையில் செல்லும்போது அந்த ஆணுக்கு அந்த பெண் முத்தமும் கொடுக்கிறார். பதிலுக்கு அந்த ஆணும் முத்தம் கொடுக்கிறார். தங்களை சுற்றி இருக்கும் பொதுமக்கள், சாலை விதிகள் என எதையும் கண்டுக்கொள்ளாத அந்த ஜோடி உல்லாசமாக சாலையில் பயணிக்கிறது.

உரிய நடவடிக்கை எடுக்க இணையத்தில் குவியும் வேண்டுகோள்

அதுமட்டுமன்றி, ஹெல்மட் அணியாமலும் வேக வரம்பை பின்பற்றாமலும் அந்த ஜோடி பயணம் செய்துள்ளது. இதனை அவர்களுக்கு பின்னால் சென்ற வாகனத்தில் இருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது முதல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. அந்த காதல் ஜோடியை கைது செய்ய வேண்டும் என்றும், உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

Latest News