5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மனிதன் போல் படிக்கட்டு ஏறிய நாய்.. வைரல் வீடியோ!

dog climbing stairs viral video: நாய் ஒன்று படிக்கட்டில் மனிதன் போல் ஏறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

மனிதன் போல் படிக்கட்டு ஏறிய நாய்.. வைரல் வீடியோ!
படிக்கட்டு ஏறிய நாய் வைரல் காணொலி
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 12 Dec 2024 12:45 PM

மனிதன் போல் படிக்கட்டு ஏறிய நாய் காணொலி: நாய் ஒரு விலங்கு என்றாலும் மனிதன் ஆரம்பக் கட்டத்தில் இதனை பழக்கி வந்துள்ளான். இதனால் ஓநாய் வகையை சேர்ந்தாலும் நாய்கள் மனிதனுடன் இயல்பிலேயே எளிதாக பழகிவிட்டன. இன்று வரை நன்றியுள்ள மிருகமாக இது பார்க்கப்படுகிறது. எனினும் அறிவியலாளர்கள் இதற்கு வேறு காரணமும் கூறுகின்றனர். அதாவது, ஓநாய் இனத்தை சேர்ந்தாலும் நாய்களால் ஓநாய்கள் போல் வாழ முடியவில்லை. வேட்டையாடும் திறனும் குறைவு. பயம் அதிகம். இதனால் நாய்கள் மனிதனுடன் இயல்பிலேயே பழகிவிட்டன என்கின்றனர். எது எப்படியோ மனிதனுக்கும் நாய்க்குமான உறவு வலிமையாகவே காணப்படுகின்றது. பல வீடுகளில் நாய்கள் குழந்தைகள் போல் கவனிக்கப்படுகின்றன. சிறப்பு கவனத்துடன் வளர்க்கவும் படுகின்றன.

இதையும் படிங்க : அட நம்ம ஜீவா பட நடிகை.. லீக்கான வீடியோ.. ரசிகர்கள் ஷாக்!

மனிதன் நாய் பாசம்

இதனால் என்னவோ நாய் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி இணையதளத்தில் கவனம் ஈர்க்கும். மனிதர்களுடன் சரிக்கு சமமாக கை கொடுத்தல், மனிதன் போல் சேட்டைகள் செய்தல் என இவை தொடரும்.
இதில் உச்சமாக எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்றிய நாய், புலியிடம் இருந்து எஜமானியை காப்பாற்றிய நாய், தன் உயிரை கொடுத்து எஜமானர் குடும்பத்தை காப்பாற்றிய நாய் என இந்தச் செய்திகள் நீள்கின்றன.

விஷ பாம்புடன் போராட்டம்

அண்மையில் கூட வீட்டுக்குள் புகுந்த விஷ பாம்பை நாய் பார்த்து கடித்து எஜமானரின் சிறு குழந்தையை காப்பாற்றியது. விஷ பாம்பிடம் இருந்து எஜமானர் குடும்பத்தை காப்பாற்ற விடிய விடிய போராட்டம் நடத்திய நாய் என்பன போன்ற செய்திகளை பார்த்தோம்.
சில வீடியோக்களில் நாய்கள் எஜமானரின் குழந்தையை தனது சொந்தம் போல் பார்ப்பதையும் நாம் பார்த்துள்ளோம். சில வீடியோக்களில் மனிதனுக்கு உதவியாக நாய்கள் ஒன்றிணைந்து வட்டி இழுப்பதையும் பார்த்துள்ளோம்.

வைரல் வீடியோ

இந்த நிலையில் தற்போது நாய் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நாய் மனிதன் போல் நடப்பதை பார்க்கலாம். அதாவது நாயின் எஜமானர் படிக்கட்டில் மேலே நிற்பார்.
அவர் நாயை அழைத்தவுடன் அந்த நாய், படிக்கட்டில் மனிதன் போல் இரு காலில் நடக்கும். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இதில் சில பனிப்பிரேதசங்களில் எடுக்கப்பட்டுள்ளன. பனிப்பிரதேசங்களில் நாய்கள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு தமிழ்நாட்டில் நடந்த ஓர் சம்பவத்தில் வளர்ப்பு நாய் உயிரிழந்தை எண்ணி பெண் தேம்பி தேம்பி கண்ணீர் சிந்தியதையும் பார்த்தோம்.

எங்கு எடுக்கப்பட்டது?

இந்த வீடியோ லட்சம் பேருக்கு மேல் சென்றடைந்துள்ளது. இதில் சுமார் 7,500 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 800 பேர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ என்னைப் பாருங்கள், நானும் மனிதன்தான் என்ற கருப்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளது.

எனினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? எப்ோது எடுக்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதனை டி.வி.9 தமிழும் ஆராயவில்லல என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சூடம் மட்டும்தான் காட்டல.. ரூ.1.6 லட்சம் லபக்.. பயபக்தி திருடன் வைரல்!

Latest News