Viral Video : மணமகன் ஊர்வலத்தில் திடீரென பெய்த பணமழை.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Uttar Pradesh | இணையத்தில் அவ்வப்போது ஏதேனும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது உத்தர பிரதேசத்தில் மணமகன் ஊர்வலத்தில் அவரது உறவினர் ரூபாய் நோட்டுக்களை தூவி வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ இணைய வாசிகளை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காரணம், திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது அவரது உறவினர் ஒருவர் ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசும் வீடியோ தான் அது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ள நிலையில், நெட்டிசன்கள் அந்த வீடியோ குறித்து கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடந்தது, இந்த வீடியோவின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
In a bizzare incident, ₹20 lakh has been showered in a marriage in Siddharthnagar of #UttarPradesh pic.twitter.com/nR28KawpjC
— Neetu Khandelwal (@T_Investor_) November 19, 2024
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ வேகமாக வைரலாகி வரும் நிலையில், பேசு பொருளாகவும் மாறியுள்ளது. காரணம், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், மணமகன் ஊர்வலம் நடக்கிறது. மேல, தாளங்கள் முழங்க மாப்பிள்ளை குதிரை வண்டியில் அமர்ந்துக்கொண்டு ஊர்வலம் செல்கிறார். அந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்கின்றனர். அப்போது திடீரென சில இளைஞர்கள் மட்டும், அங்கிருக்கும் ஒரு வீட்டின் இரண்டாவது மாடி மீது ஏறி அங்கிருந்து ரூபாய் நோட்டுக்களை காற்றில் பறக்க விடுகின்றனர். இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள், கீழே குணிந்து ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : சரமாரியாக தாக்கிக்கொண்ட கும்பல்.. இடையில் வந்த ஆம்புலன்ஸ்.. அடுத்து நடந்தது என்ன?
வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகனின் உறவினர் ஒருவர் மணமகன் ஊர்வலத்தின் போது மலர் தூவுவதுபோல மணமகன் மீது ரூபாய் நோட்டுக்களை தூவியுள்ளார். இவ்வாறு மணமகன் மீது பணம் தூவுவதற்காக அவர் சுமார் ரூ.20 லட்சத்தை பயன்படுத்தியுள்ளார் என்று தகவல்கள் கூறுகிறது. மணமகன் ஊர்வலத்தில் மலர் தூவுவது போல ரூபாய் நோட்டுக்கள் தூவப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : உல்லாசமாக பாராகிளைடிங் செய்த நாய்.. இணையத்தை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கிய வீடியோ!
கிண்டலாக கருத்து பதிவிட்டு வரும் நெட்டிசன்கள்
இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு பலரும் ஆச்சர்யத்துடன் வியந்து கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், சில நெட்டிசன்கள் கிண்டலாகவும் பதிவிட்டு வருகின்றனர். திருமண விழாவில் மணமகன் மீது ரூபாய் நோட்டுக்களை வீசிய நபர், உலக பணக்காரர் எலான் மக்ஸ்கின் உறவினர் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். அதனால் தான் பணத்தை இவ்வாறு வீசுகிறார் என்று தெரிவித்துள்ளார். மாப்பிள்ளை பிட் காயின் முதலீட்டாளர். அதனால் தான் இவ்வளவு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கிறார் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும், இது வெளி வேஷம் என்றும், பிறரின் கவனத்தை ஈர்க்கவும் வீன் புகழுக்காக செய்யப்படுவதாகவும் மற்றொருவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : மருத்துவமனையில் “Party” கொண்டாடிய மருத்துவர்கள்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ இணையத்தில் வைரல்!
இணையத்தில் அவ்வப்போது ஏதேனும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது உத்தர பிரதேசத்தில் மணமகன் ஊர்வலத்தில் அவரது உறவினர் ரூபாய் நோட்டுக்களை தூவி வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.