5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. பின்பக்கமாக கவிழ்ந்த லாரி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

Huge Pit | சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு லாரியே மூழ்கும் அளவுக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது, இந்த விபத்தில் சிறிய வாகனங்கள் ஏதேனும் சிக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Viral Video : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. பின்பக்கமாக கவிழ்ந்த லாரி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!
வைரல் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 22 Sep 2024 11:50 AM

புனே சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் தலைக்குப்புற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சாலையில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : இளம் பெண் படுகொலை.. 30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் அடைத்த கொடூரம்.. பெங்களூருவில் திடுக்கிடும் சம்பவம்!

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் – தலைக்குப்புற விழுந்த லாரி

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி ஒன்று, ஒரு நொடி சில அடிகள் பின்நோக்கி செல்கிறது. அப்போது சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு, அந்த லாரி தலைக்குப்புற பள்ளத்தில் விழுகிறது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி முழுவதுமாக உள்ளே சென்றுவிட, லாரியின் முன் பகுதி மட்டும் மேலே தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிச் சென்று லாரியின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரை காப்பாற்றுகின்றனர். இந்த விபத்தின் முழு காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், தற்போது அந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு லாரியே மூழ்கும் அளவுக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது, இந்த விபத்தில் சிறிய வாகனங்கள் ஏதேனும் சிக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர், தரமற்ற சாலைகளால் சாலையில் பயணிப்பதே அபாயகரமாக மாறிவரும் சூழல் நிலவுவதாக கூறியுள்ளனர். மேலும் சிலர், தரமான சாலைகளை அமைக்கவும், அவற்றை அவ்வப்போது ஆய்வு செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : Srilanka Presidential Election : விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிக்கும் அனுரகுமார நிஸாநாயக்க!

இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : அதிகாரிகள் முன்பு சீருடையை கழட்டி எறிந்த காவலர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் புனே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரி தலைக்குப்புற விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News