5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரீல்ஸ் மோகத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த இளம்பெண்.. பகீர் வைரல் வீடியோ!

Young woman viral reels video: ரீல்ஸ் மோகத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த இளம் பெண் ஒருவரின் காணொலி காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. இந்த வீடியோ டான்ஸ் மோகம் தொடர்பான எச்சரிக்கையை மீண்டும் தூண்டியுள்ளது.

ரீல்ஸ் மோகத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த இளம்பெண்.. பகீர் வைரல் வீடியோ!
ரீஸ்ஸ் மோகத்தில், பள்ளத் தாக்கில் தவறி விழுந்த இளம்பெண்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 27 Nov 2024 15:59 PM

இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்கள் இன்றியமையாததாக மாறியுள்ளன. முன்பெல்லாம், நாம் ஒருவரிடம் எவ்வாறு பேசுவது, தொடர்புகொள்வது மற்றும் தகவல்களைப் பெறுவது என்பது குறித்து சமூக வலைதளங்கள் பேசின. ஆனால், சமூக ஊடகங்கள் தற்போது முற்றிலும் மாற்றியுள்ளன. அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்வது, அரட்டை அடித்தல் ஆகியவற்றையும் தாண்டி பல பொழுதுப்போக்கு அம்சங்களை கொண்டுள்ளன. இதனால், தனியுரிமை தொடர்பான சிக்கல்கள், தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் சைபர்புல்லிங் சாத்தியம் போன்ற குறைபாடுகளும் ஏற்பட்டுள்ளன.

சமூக வலைதள மோகம் நமது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? என்பது நமக்கு தெரிந்தால் சமூக ஊடகங்களை எவ்வாறு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது என்பதை நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், தற்போது ஆன்லைன் மோகத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

இமாச்சல் பெண் பூஜா என்ன ஆனார்?

இந்தியாவின் இமயமலை மாநிலமான இமாச்சலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவருக்கு ரீல்ஸ் மோகம் அதிகம். அன்றாட நிகழ்வுகளை கூட ரீல்ஸ் ஆக்கி சமூக வலைதளங்களில் பதிவிட ஆர்வம் கொண்டவர்.
தற்போது இவர் பள்ளத் தாக்கில் உருண்டு விழுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? பூஜா உயிர் தப்பினாரா? விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க:  ‘டாஸ்மாக் செல்வேன், நான் குடிகாரன் இல்லை’: வைரல் மது பிரியர்!

பள்ளத்தாக்கில் விழுந்த பெண் – வைரல் வீடியோ

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் நிகழந்துள்ள இந்த வைரல் வீடியோ நடப்பாண்டு அக்டோபரில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், ஒரு இளம் பெண் மலைகளுக்கு நடுவே ஒரு ரீல்ஸ் எடுக்க நடனம் ஆடுவதை பார்க்கலாம்.

வீடியோவில், அந்தப் பெண் ஒரு பாறையின் மீது நின்று தனது துப்பட்டாவை காற்றில் பிடித்துக்கொண்டு பாலிவுட் பாடலான ‘பேபனா பியார் ஹை’என்பதற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவார். தொடர்ந்து அவர் பள்ளத்தாக்கின் சீரற்ற பாதையில் துள்ளி குதித்து நடனத்தை தொடர்வார். இதனை அவரது தோழி செல்போனில் படம் பிடித்துள்ளார்.

காவல் துறை எச்சரிக்கை

இந்நிலையில், தவறி விழுந்த பூஜா, பள்ளத் தாக்கில் எவ்வித பிடியும் இன்றி உருளுவார். ரீல்ஸ் மோகம் அவரது உயிரை ஆபத்துக்குள்ளாக்கியது.
எனினும், பூஜா சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதனை கவனித்த காவல் துறை, “இதுபோன்ற விபரீதங்களில் யாரும் ஈடுபட வேண்டாம். ரீல்ஸ் மோகத்தில் சிக்கி பொன்னான உயிரை இழந்து விடாதீர்கள்” என எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டுகளில் அழகிய பொம்மை.. இளைஞர் அசத்தல்!

Latest News