5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Photo : சக்கர நாற்காலி வழங்காத விமான நிர்வாகம்.. கழிவறைக்கு தவழ்ந்து சென்ற செய்தியாளர்.. வைரல் புகைப்படம்!

Journalist Issue | பிரிட்டனை சேர்ந்த ஃபிராங்க் கார்டனர் செய்தியாளர் ஒருவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது கால்களை இழந்துள்ளார். இந்த நிலையில், LOT Polish Airlines Flight-ல் பயணம் செய்த அவருக்கு விமான நிர்வாகம் சக்கர நாற்காலி வழங்காத நிலையில், அவர் தவழ்ந்துகொண்டே கழிவறைக்கு சென்றுள்ளார்.

Viral Photo : சக்கர நாற்காலி வழங்காத விமான நிர்வாகம்.. கழிவறைக்கு தவழ்ந்து சென்ற செய்தியாளர்.. வைரல் புகைப்படம்!
வைரல் புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 01 Oct 2024 19:52 PM

பயணிகளின் பாதுகாப்பையும், நலனையும் கருதி விமானத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக உணவு, இருக்கை, கழிவறை, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்படும். அதுமட்டுமன்றி விமானத்தில் பயணிக்கும்போது, பயணிக்கு ஏதேனும் உடல்நல கோளாறுகள் ஏதேனும் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் வகையில், சில விமானங்களில் பாதுகாப்புக்காக மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். இதேபோல மாற்றுத்திற்னாளிகளுக்கான சலுகைகள் மற்றும் முதியவர்களுக்கான சலுகைகளும் வழங்கப்படும். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஒரு செய்தியாளருக்கு விமான பயணத்தில் சர்க்கர நாற்காலி வழங்காத நிலையில், அவர் தவழ்ந்துக்கொண்டே கழிவறைக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Donald Trump : பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்ட டொனால்ட் டிரம்பின் ராட்சத நிர்வாண சிலை.. பொதுமக்கள் கடும் விமர்சனம்!

மாற்றுத்திறனாளி பத்திரிக்கையாளருக்கு நடந்த சோகம்

பிரிட்டனை சேர்ந்த ஃபிராங்க் கார்டனர் என்பவர் பிபிசி செய்தி ஊடகத்தில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது கால்களை இழந்துள்ளார். இந்த நிலையில், LOT Polish Airlines Flight-ல் பயணம் செய்த அவருக்கு விமான நிர்வாகம் சக்கர நாற்காலி வழங்காத நிலையில், அவர் தவழ்ந்துகொண்டே கழிவறைக்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இது 2024 ஆம் ஆண்டு ஆனால் நான் விமானத்தில் சர்க்கர நாற்காலி இல்லாததால் தவழ்ந்து சென்று கழிவறையை பயன்படுத்தினேன். எங்களிடம் சர்க்கர நாற்காலி இல்லை, அது எங்கள் நிறுவனத்தின் பாலிசியில் இல்லை என்று கூறுகின்றனர். நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்து உங்களால் நடக்க முடியவில்லை என்றால் உங்களுக்கும் இதுதான் நடக்கும். இது மிகவும் மோசமான நடைமுறை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், “LOT Polish Airlines ஊழியர்களை நான் பாராட்டுகிறேன். அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். இது அவர்களுடைய தவறு இல்லை. இது முற்றிலும் விமான நிர்வாகத்தின் தவறு. LOT Polish Airlines 21 ஆம் நூற்றாண்டில் நுழையும் வரை நான் அதில் பயணம் செய்ய மாட்டேன்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

விமான நிறுவனந்த்தின் செயலுக்கு இணையத்தில் குவியும் கண்டனங்கள்

மாற்றுத்திறனாளி செய்தியாளர் ஃபிராங்க் கார்டனர் தனக்கு நடைபெற்ற சோக சம்பவத்தை பகிர்ந்துள்ள நிலையில், LOT Polish Airlines நிறுவனத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சாதரன பேருந்துகளிலேயே மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்கும் விதமாக படிகட்டுகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் பட்சத்தில், விமானத்தில் சர்க்கர நாற்காலி வழங்காதது கண்டிக்கத்தக்கது எல பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். விமானத்தில் வழங்கப்படும் வசதிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்பபடும் நிலையில், அதற்கான சேவைகளை வழங்க வேண்டும் என்பது விமான நிர்வாகத்திற்கு தெரியாத என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Latest News