140 கிலோவை அசால்டாக தூக்கும் இளம்பெண்.. தீயாக பரவும் வீடியோ..! - Tamil News | Viral Video A Woman Weight Lifting 140 kgs In Traditional Saree | TV9 Tamil

140 கிலோவை அசால்டாக தூக்கும் இளம்பெண்.. தீயாக பரவும் வீடியோ..!

Updated On: 

26 Sep 2024 10:54 AM

Viral Video : இணையத்தளங்களில் தற்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் இளம்பெண் ஒருவர் சுமார் 140 கிலோ எடை கொண்ட பாரை அசால்டாக தூக்கியுள்ளார். அதுவும் அந்த இளம்பெண் இந்தியாவின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்தபடி இந்த 140 கிலோ எடையைத் தூக்கியுள்ளார்.

140 கிலோவை அசால்டாக தூக்கும் இளம்பெண்.. தீயாக பரவும் வீடியோ..!

எடையை தூக்கும் பெண்

Follow Us On

ஆச்சரிய மூட்டும் வீடியோக்கள் தினந்தோறும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இளம் பெண் ஒருவர் ஜிம்மில் சுமார் “140 கிலோ” எடையைத் தூக்கி இணையத்தில் மாஸ் காட்டி வருகிறார். வைரலான இந்த வீடியோ இணைய வாசிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் சேலை அணிந்து எடையைத் துக்கியுள்ளார் , மேலும் நெட்டிசன்கள் இவரை இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர். இந்த மாதிரியான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த பெண்ணின் திறமையானது பல பெண்களுக்கு உதாரணமாக இருக்கிறது. இந்த வீடியோவானது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

Also Read : Viral Video : ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதறிப்போன பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?

சுமார் 19 வினாடிகள் கொண்ட வீடியோவில், அவள் பச்சை நிற புடவையை அணிந்திருந்த இந்த இளம் பெண் ஒரு பெரிய எடையைத் தூக்கத் தயாராகி,  இளம் பெண்  சேலையைக் கட்டிக்கொண்டு எடை தூக்கும் முன் பெல்ட்டையும் கட்டிக்கொண்டு சுமார்  “140 கிலோவை” மிக எளிதாகத் தூக்கியுள்ளார். இந்த பெண் ஒரு அனுபவமிக்க பளுதூக்குபவர் போல மிகவும் நிதானமாக எடையைத் தூக்கும் வீடியோவாக இது இருக்கிறது. உடற்பயிற்சி கூடம் முழுவதும் மூவர்ண பலூன்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Also Read : இளம் பெண் படுகொலை.. 30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் அடைத்த கொடூரம்.. பெங்களூருவில் திடுக்கிடும் சம்பவம்!

இந்த வீடியோவில் பின்னணி பாடலாக “ஹேப்பி நியூ இயர்” படத்தின் “காஹ்தே ஹைன் ஹம்கோ பியார் சே” என்ற ஹிந்தி பாடல் ஒலித்தபடி இருக்கிறது. இந்த வீடியோவில் அனைவரையும் கவர்ந்தது மற்றும் சமூக ஊடகங்களில் புயலாகப் பரவிவருகிறது. இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. “பாரம்பரிய உடையை அணிந்திருக்கும் போது உங்களால் எடையைத் தூக்க முடியாது என்று யார் கூறுகிறார்கள்” என்ற தலைப்பில் இணையத்தில் இவர் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது இன்ஸ்டாகிராமில் தீயாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவானது சுமார் 47 மில்லியன் பார்வையாளர்களையும் , 2.3 மில்லியன் லைக்குகளையும் மற்றும் சுமார் 11 ஆயிரம் கமெண்ட் போன்ற மில்லியன் கணக்கான வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read : “பூவே உனக்காக” பட நடிகை சங்கீதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!

 

இந்த வீடியோவின் கீழ் இவரின் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் “இவ்வாறு 140 கிலோ எடையைத் தூக்கிய சாதனைப் பெண் என்றும் 140 கிலோ எடையைத் தூக்குவது நகைச்சுவையல்ல என்று ஒருவர் கூறியுள்ளார்”. அதேபோல “120 கிலோ என்றும் சிலர் கூறியுள்ளனர். மற்றொரு இணையவாசி எடை 120 கிலோ மற்றும் அந்த கம்பி 20 கிலோ” என்று அவரை தெளிவுபடுத்தியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் பாரம்பரிய சேலையை அணிந்து எடை தூக்கும் பாரம்பரிய பெண் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..!

Also Read : GOAT Song: கோட் பட பாடல்.. பவதாரணி குரலில் உருவானது எப்படி தெரியுமா?

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version