Viral Video: வேற லெவல்… அனைத்து வேலைக்கும் ரோபோ வந்தாச்சு.. வைரல் வீடியோ! - Tamil News | Viral Video America Tesla Optimus Robot Show In trending On Internet | TV9 Tamil

Viral Video: வேற லெவல்… அனைத்து வேலைக்கும் ரோபோ வந்தாச்சு.. வைரல் வீடியோ!

Viral Video : சமூக ஊடகங்களில் பயன்பாடுகள் மக்களிடையே அதிகரித்து வருகின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக மிக எளியதாகத் தகவல்கள் பரிமாறி வருகின்றன. அந்த வகையில் இணையதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் ட்ரெண்டிங்க் செய்திகள் அனைத்தும் தற்போது மக்கள் கையில் இருக்கிறது.

Viral Video: வேற லெவல்... அனைத்து வேலைக்கும் ரோபோ வந்தாச்சு.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

12 Oct 2024 20:59 PM

வைரல் வீடியோ: தற்போது உள்ள நவீன காலத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போனை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக இவர்களுக்கு எந்த ஒரு தகவல்கள் என்றாலும் மிக எளிதாகச் சென்று விடும் அதைப்போல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற “டெஸ்லாவின் ரோபோட்டிக்ஸ்” மற்றும் AI முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்திய நிகழ்ச்சியில் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் ஆப்டிமஸ் மனித உருவம் கொண்ட ரோபோட், நடப்பது, பொருட்களைத் தூக்குவது மற்றும் அடிப்படை உரையாடல்களில் ஈடுபடும் போன்ற சுவாரசியமான விஷயங்களால் அங்குள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோவானது வேகமாக இணையத்தில் பரவிவருகிறது.

மனித சமுதாயத்தில் தற்போது தொழினுட்பங்களின் வளர்ச்சியால் அடுத்தடுத்த கட்டத்திற்கு சமுதாயம் முன்னேறி வருகிறது. இது ஒருவகையில் நல்லதாக இருந்தாலும் AI மற்றும் ரோபோர்ட்களின் வளர்ச்சியால் மக்களின் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது.

இதனால் வருங்காலத்தில் மனிதர்களின் முழு வேலையையும் இயந்திரங்களே செய்துவிடும் எனப் பல ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர். இந்த செய்தியினை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “We Robot” நிகழ்வில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தலைமையில் நடந்துள்ளது.  இதில் ஆப்டிமஸ் எனப்படும் மனித உருவம் கொண்ட ரோபோக்கள், சுயமாக ஓட்டும் கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட எதிர்கால கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க :Viral Video: சுற்றுலா பேருந்தில் ஏற முயன்ற சிறுத்தை.. பீதியான பயணிகள்..!

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!

 

இந்த வீடியோவில் ​​ஆப்டிமஸ் ஹுமனாய்டுகள் ஒன்று மனிதர்களுடன் சாதாரணமாகப் பேசி மக்களை அசரவைப்பதை இந்த வீடியோவில் நாம் காணலாம் இதில் பேசும் அந்த நபர் “இது உண்மைதானா..? நான் ஒரு ரோபோவுடன் பேசுகிறேன்!” அங்குள்ள மற்றொரு ​​விருந்தினர் ஆப்டிமஸிடம் ரோபோவாக இருப்பதில் கடினமான பகுதி என்ன என்று கேள்வியை அந்த ரோபோர்டிடம் கேட்கிறார், மேலும் அந்த ரோபோர்ட்டும் பதிலளிக்கிறது அது என்னைக்குறியது என்றால் “உங்களைப் போலவே மனிதர்களாக இருப்பது எப்படி என்பதை அறிய முயற்சிக்கிறேன்,” என்று வந்த விருந்தினர்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கும் நிகழ்ச்சியினை செய்துள்ளது. இந்த வீடியோ சுமார் 3.9 மில்லியன் பார்வையாளர்களையும் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் பெற்று ட்ரெண்டிங் லிஸ்டில் உள்ளது.

இதையும் படிங்க :Viral Video : திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிய இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

 

 

அடுத்த வீடியோவில் இம்மானுவேல் ஹுனா, மற்றொரு எக்ஸ் பயனரும், ஆப்டிமஸுடன் ரோபோர்டுகளுடன் “ராக், பேப்பர் மற்றும் சீஸர் ” விளையாடுவதைப் போன்ற வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் “ராக், பேப்பர், சீஸர் விளையாட ஆப்டிமஸைக் கேட்டேன், அது செய்தது – அதைப் பாருங்கள்!” அவர் தலைப்பில் என்ற இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

எலான்  மஸ்க் :

இந்த நிகழ்ச்சியின் போது டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நிகழ்வில் கூறிகையில், “இந்த ஆப்டிமஸ் உங்களிடையே நடப்பார். நீங்கள் அவர்களை நோக்கி நடக்க முடியும், மேலும் அவர்கள் பானங்களை வழங்குவார்கள், ”என்றும் இந்த ரோபோக்கள் குழந்தை காப்பகம், நாய்களை நடமாடுதல், புல்வெளிகளை வெட்டுதல் போன்ற திறன் கொண்டதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

“ஒருவர் ஆப்டிமஸ் செயலில் நான் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் அதை விரும்புகிறேன். பெரிய தயாரிப்பு இது கையின் இயக்கம் மற்றும் இடைவினை மிகவும் இயற்கையாக இருக்கிறது . விளையாட்டு, நடைகள் மற்றும் உயர்வுகளுக்கு உங்கள் நண்பராக இருக்கலாம் மற்றும் சாத்தியங்கள் வரம்பற்றதாகத் தெரிகிறது” என்றும்,

மற்றொருவர் “நாளை குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு,  ஆசிரியர், நண்பர், தனிப்பட்ட உதவியாளர், கனரக இயந்திரங்களை இயக்குபவர், முதல் பதிலளிப்பவர், விண்கலம் பயணியர், புதிய நகரங்களை உருவாக்குபவர் மற்றும் பராமரிப்பவர் மற்றும் இந்த உலகத்தில் உள்ளேயும் முக்கியமான விஷயங்களாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க :Viral Video: சுற்றுலா பேருந்தில் ஏற முயன்ற சிறுத்தை.. பீதியான பயணிகள்..!

கிவி பழம் தினசரி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்?
டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
Exit mobile version