5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video: பீகார் மாநிலத்தில் கனமழை..! அபாயத்தில் பொதுமக்கள்..!

Viral Video : பீகார் மாநில அரசு தாழ்வான பகுதிகளுக்கு, குறிப்பாக ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பொதுமக்கள் ஆற்றிற்குச் செல்லவேண்டாம் எனவும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் தகுந்த எச்சரிக்கையை அரசு அறிவித்துள்ளது.

Viral Video: பீகார் மாநிலத்தில் கனமழை..! அபாயத்தில் பொதுமக்கள்..!
வைரல் வீடியோ
Follow Us
barath-murugantv9-com
Barath Murugan | Published: 01 Oct 2024 19:16 PM
பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது  இதனால் அங்குக்  கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு ஓடும் கோசி, பாக்மதி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் அந்த ஆறுகளில் அபாயக் கட்டத்துக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.  பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள ஆறுகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டு வந்திருக்கிறது. இதனால் பீகார் மாநில அரசு தாழ்வான பகுதிகளுக்கு, குறிப்பாக ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பொதுமக்கள் ஆற்றிற்குச் செல்லவேண்டாம் எனவும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் தகுந்த எச்சரிக்கையை அரசு அறிவித்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை  மாநிலங்களவை எம்பியும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ரஞ்சீத் ரஞ்சன் என்பவர் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோவில் பீகார் மாநிலத்தில் முக்கிய ஆறான  கோசி ஆற்றின் நடுவே கட்டப்பட்டிருந்த பாலத்தில் கீழ்  வேகமாக ஓடும் வெள்ளத்தைக்  கண்டது  மக்கள் பீதியுடன்  மக்கள் பாலத்திலிருந்து ஓடுவதையும் அலறுவதையும்  இந்த வீடியோவில் நாம் பார்க்க முடியும்..!

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!

வைரல் வீடியோ :

இந்த வீடியோவில் ஆற்றின் வெள்ளப்பெருக்கின் அபாயம் தெரியாமல் மக்கள் அனைவரும் ஆற்றின் பாலத்தில் அபாயகரமான விதத்தில் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். படிப்படியாக ஆற்றின் வெள்ளம் உயர்வதைக் கண்டு மக்கள் பீதியுடன் ஓடும் கட்சிகளை இந்த வீடியோவில் நாம் காணலாம். இதற்காகப் பீகார் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதில், “இந்த கோசி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் சுபால், சஹர்சா, மாதேபுரா, மதுபானி, தர்பங்கா, ககாரியா, பாகல்பூர், கதிஹார் மற்றும் நவ்காச்சியா போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களை அரசு எச்சரித்துள்ளது .

இதைத்தொடர்ந்து அந்த மாவட்ட ஆட்சியர் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் மற்றும் மக்கள் யாரும் ஆற்றின் நீர்மட்டம் உயரும் போது விழிப்புடன் இருக்கவும் என்று மக்களுக்கு அறிவித்துள்ளார்.

Also Read :ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு… எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா?

இந்த வீடியோவில் ஆற்றின் நீர்மட்டம் பாலத்தின் மேற்பரப்பைத் தொடத் தொடங்கும் போது மக்கள் பாலத்திலிருந்து இறங்கி ஓடுவதைப் பார்க்க முடிகிறது. இதில் பலர் தங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் பாலத்திலிருந்து வெளியேறும் பொது அங்கு உள்ள பெண்கள் அலறுவதை இந்த வீடியோவில் பார்க்கலாம். இதில் சிலர் ஆற்று நீரிலிருந்து தப்பிக்க ஓடினாலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டு அபாயகரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பீகாரில் இன்னும் மழை பெய்யும் எனவும் வரும் நாட்களில் பீகார் முழுவதும் மிகக் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி). இதன் காரணமாக பீகார் மாநிலத்தில் ‘மஞ்சள்’ எச்சரிக்கையை அறிவித்துள்ளது.

Also Read :Viral Video : உண்டியல் பணத்தை திருடும் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் கருத்து..!

இந்த வீடியோவின் கீழ் பலர் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் சிலர் கருத்துக்களைப் பார்க்கலாம். எக்ஸ் பயனர் ஒருவர் “மக்கள் தங்கள் பொருட்களையும் கால்நடைகளையும் கொண்டு பல பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். இதற்கு, நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உதவி பெற வேண்டும். முற்றிலுமாக அழியும் வாய்ப்பு உள்ளது. குடியேற்றத்தைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்” என சமூகப் பொறுப்புடனும் தெரிவித்துள்ளார் .

மற்றொரு எக்ஸ் பயனர் “இந்த பாலமானது ஜவஹர்லால் நேரு ஆட்சியில் கட்டிய விலைமதிப்பற்ற பணியில் உருவாகிய பாலமாகும்.. ஆனால் யாருக்கும் நினைவில் இல்லை.! இது பீகார் மக்களை ஆண்டுதோறும் இந்த கனமழை வாட்டி வதைக்கிறது. இதற்காக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ” எனவும் இந்த வீடியோவின் கீழ் “கமெண்ட்” செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read :வாவ்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்.. நீலகிரியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!

Latest News