5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : கன்றுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

வைரல் வீடியோ : மலைப்பாம்பு ஒன்று பசு கன்று ஒன்றை விழுங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த கன்றை மீட்கும் வகையில் கிராம மக்கள் செய்யும் காரியமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் வயல்வெளியில் பசியுடன் மறைந்திருந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Viral Video : கன்றுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு..  வைரல் வீடியோ..!
வைரலாகும் வீடியோ
barath-murugantv9-com
Barath Murugan | Published: 16 Oct 2024 14:37 PM

சமீபகாலமாக மக்கள் மத்தியில் இணையதளங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் எந்த ஒரு நிகழ்ச்சியோ அல்லது தகவல்களோ மக்களிடையே எளிதில் சென்றுவிடுகிறது. இவ்வாறு மக்களின் இணையப் பயன்பாடு அதிகரிப்பதால் பல அதிர்ச்சி, நகைச்சுவையான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மிகவும் எளிதாக வைரலாகின்றன. இந்த நிலையில் தற்போது மலைப்பாம்பு ஒன்று பசு கன்று ஒன்றை விழுங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த கன்றை மீட்கும் வகையில் கிராம மக்கள் செய்யும் காரியமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் வயல்வெளியில் பசியுடன் மறைந்திருந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வயல் வெளியிலிருந்த பாம்பின் வயிறு குண்டாக இருந்ததால் சந்தேகமடைந்துள்ளனர் இதனால் உடனடியாக பாம்பு பிடிப்பவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுள்ளது. அங்கு வந்த பாம்பு பிடிப்பவர் மலைப்பாம்பைப் பிடித்து வெகுநேரம் வயிற்றிலிருந்த கன்றை வெளியேற்றியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் புயல் போலப் பரவி வருகிறது.

இதையும் படிங்க :Viral Video: சுற்றுலா பேருந்தில் ஏற முயன்ற சிறுத்தை.. பீதியான பயணிகள்..!

இந்த வீடியோவை பர்வீன் கஸ்வான், ஐ.எஃப்.எஸ் என்ற எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இவர் அந்த வீடியோ பதிவில் “சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், மலைப்பாம்பு விழுங்கிய கன்றுக்குட்டியைக் காப்பாற்ற உள்ளூர் வாசிகள் சிலர் முயற்சித்துள்ளனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்; இயற்கை உலகில் இப்படித் தலையிடுவது சரியா? அல்லது தவறா .” என்று தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : பெண் மீது விழுந்த தண்ணீர் தொட்டி.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!

 

நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனரா அந்த வகையில் பயனர் ஒருவர் “இயற்கை ஒழுங்கை ஒருபோதும் குழப்ப வேண்டாம், கன்று ஏற்கனவே இறந்து விட்டது மற்றும் மலைப்பாம்பு அதன் உணவை நீண்ட காலத்திற்கு உறக்க நிலையில் வைத்திருக்க இயற்கை வழி.. மனிதர்கள் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய அறிவுடன் தங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

” விலங்குகளின் இயற்கைச் செயல்களில் மனிதன் தலையிடக் கூடாது. மோதலைத் தவிர்ப்பதற்காக விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதை மனிதன் தவிர்க்க வேண்டும் என்றும் மூன்றாவது பயனர் “இந்தியா முழுவதும் பால் பண்ணை தொழிலில் தினமும் லட்சக்கணக்கான ஆண் கன்றுகள் இறந்து விடுகின்றன. பாவம் மலைப்பாம்பு! என்றும் தங்களின் கருத்துக்களை இந்த பதிவின் கீழ் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :Viral Video: வேற லெவல்… அனைத்து வேலைக்கும் ரோபோ வந்தாச்சு.. வைரல் வீடியோ! 

Latest News