Viral Video: சுற்றுலா பேருந்தில் ஏற முயன்ற சிறுத்தை.. பீதியான பயணிகள்..!
Viral Video : சமீபகாலமாக மக்கள் மத்தியில் இணையதளங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் எந்த ஒரு நிகழ்ச்சியோ அல்லது தகவல்களோ மக்களிடையே எளிதில் சென்றுவிடுகிறது. இவ்வாறு மக்களின் இணையப் பயன்பாடு அதிகரிப்பதால் பல அதிர்ச்சி, நகைச்சுவையான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மிகவும் எளிதாக வைரலாகின்றன. அந்த விதத்தில் சிறுத்தை ஒன்று பேருந்து ஒன்றில் தொற்றுவது போல் உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ : தற்போது உள்ள காலத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போனை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக இவர்களுக்கு எந்த ஒரு தகவல்கள் என்றாலும் மிக எளிதாகச் சென்று விடும் அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் “பன்னர்கட்டா தேசிய பூங்காவில்” சிறுத்தை ஒன்று சுற்றுலாப் பயணிகள் பயணித்த சஃபாரி பேருந்தில் ஏற முயன்றதால் பெரும் பதற்றத்தை ஏற்படுட்டது. பேருந்தில் இருந்த அனைவருக்கும் மரண பயத்தை கண்முன்னே காட்டியுள்ளது. திறந்த வெளி விலங்குகள் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை அதற்கென பாதுகாப்பான பேருந்துகளில் அழைத்துச் சென்று அவர்களுக்கு அந்த பூங்காவைச் சுற்றிக் காண்பிப்பது வழக்கம். அதுபோல் இந்த வைரல் வீடியோவில் சுற்றுலாப் பயணிகளைச் சுற்றிப் பார்க்கும் விதத்தில் அழைத்துச் சென்ற போது சிறுத்தை ஒன்று பயணிகளின் பேருந்தில் தொற்றியவாறு பயணிகளை அச்சுறுத்தும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது .
இதையும் படிங்க :Navrathiri: அப்படிப்போடு.. நவராத்திரி பண்டிகைக்கு பாடல் எழுதிய பிரதமர் மோடி!
இந்த வீடியோவை அணில் புதுர் என்ற எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இவர் அந்த வீடியோ பதிவில் “பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் அதன் இயற்கைக்கு அருகில் உள்ள சிறுத்தைகளுடன் நேருக்கு நேர் வாருங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஒரே சஃபாரி இது தான்!” என்று தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க :Viral Video : குழந்தையின் கையிலிருந்த போனை திருடிய நபர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!
Come face-to-face with leopards in its near-natural habitat at Bannerghatta Biological Park #Bengaluru. Its the only 🐆 🐆 🐆 safari in #India!! Visit soon, except Tuesdays, before they come visit an enclave near you 🙀 pic.twitter.com/eS7FZaKR0N
— Anil Budur Lulla (@anil_lulla) October 6, 2024
வைரல் வீடியோ :
தற்போது வைரலாகும் இந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பேருந்து ஜன்னல் வழியாகப் பேருந்தில் ஏறுவதைக் காணலாம். பேருந்து உள்ளே சுற்றுலாப் பயணிகளைச் சிறிது நேரம் கண்காணித்து பின் ஜன்னல் அருகே தனது பாதங்களை வைத்து ஏறுவதற்கு முயற்சி செய்கிறது. பின் அந்த பேருந்தின் ஓட்டுநர் சஃபாரி பேருந்தை முன்னோக்கி நகர்த்தும்போது அந்த பெரிய சிறுத்தையின் பிடியானது நழுவியது. இந்த காரணத்தால் அங்கு நடக்க இருந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. சுமார் 21 வினாடிகள் கொண்ட இந்த காட்சியானது தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க :Zomato: சொமேட்டோ சிஇஓவுக்கு நேர்ந்த கதி.. அலர்ட்டான நிர்வாகம்.. ஊழியர்கள் ஹேப்பி!
இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் கருத்து..!
இந்த வீடியோவானது 220,00,00 மேற்பட்ட பார்வைகள் பார்த்துள்ளனர். அதில் பல பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவின் கீழ் ஒரு பயனர் “ஒருமுறை ஒரு புலி தனது தாத்தாவின் மடியிலிருந்து ஒரு சிறுமியை இழுத்துச் சென்றதாகவும் இப்போது கூட அது சாத்தியம் என்று என்னால் நம்ப முடியவில்லை” என்னும் ஒருவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க :Crime: இளமையாக மாறலாம்.. முதியவர்களை குறிவைத்து ரூ.35 கோடி மோசடி!
மற்றொரு பயனர், “அவை காட்டு விலங்குகள் அவைகளுக்கு நாம் பயணிக்கும் போது உணவுகளை வழங்கக்கூடாது, அதனால் தான் அவை எதிர்பார்க்கின்ற மாதிரியாகப் பேருந்தில் தொற்றுகிறது என்றும் தன் கருத்தை இந்த வீடியோவின் கீழ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது பல லட்சம் மக்களால் பகிரப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.