5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video: தொல்லை கொடுத்த தெரு நாய்.. துப்பாக்கியால் சுட்ட நபர்.. வலுக்கும் கண்டனம்!

Madhya Pradesh: street dogs of bombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு நபர் தெருவில் நிற்கும் நாய் ஒன்றை நெருங்கி, பின்னர் மெதுவாக  அதனை துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியளிக்கக்கூடிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக நாய் உயிர் தப்பியது. ஆனால் கால் பகுதியில் குண்டு துளைத்ததால் பலத்த காயத்துடன் சிகிச்சைப் பெற்று வருவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Viral Video: தொல்லை கொடுத்த தெரு நாய்.. துப்பாக்கியால் சுட்ட நபர்.. வலுக்கும் கண்டனம்!
நாய் மீது தாக்குதல் நடைபெறும் சிசிடிவி காட்சி
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 10 Nov 2024 11:51 AM

வைரல் வீடியோ: மத்தியப்பிரதேச மாநிலத்தில் தெரு நாயை ஒரு நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் பெற்றுள்ளது. street dogs of bombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு நபர் தெருவில் நிற்கும் நாய் ஒன்றை நெருங்கி, பின்னர் மெதுவாக  அதனை துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியளிக்கக்கூடிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக நாய் உயிர் தப்பியது. ஆனால் கால் பகுதியில் குண்டு துளைத்ததால் பலத்த காயத்துடன் சிகிச்சைப் பெற்று வருவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் நாயை சுடும்போது அப்பகுதியில் சில மக்கள் இருக்கின்றனர். அவர்கள் யாரும் அந்த நபரை தடுக்க முயற்சிக்கவில்லை. இதனால் அவர்களையும் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Also Read: Viral Video: காருக்கே இறுதிச் சடங்கு செய்த விவசாயி.. 4 லட்சம் செலவு.. யார்ரா இவரு?

வாயில்லா ஜீவன் மீது இப்படி ஒரு கொடூர தாக்குதல் நடப்பதை பார்த்தும் எப்படி உங்கள் மனம் பேச மறுக்கிறது என கேள்வியெழுப்பியுள்ளனர். நாயை கொடுரமாக துன்புறுத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விலங்குகள் நல ஆணையம் உடனடியாக தலையீட்டு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். தெருநாய்கள் மீதான தாக்குதல் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகைய வீடியோவை பொதுவெளியில் வெளியிட்டதாக street dogs of bombay தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டம் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயிரினங்களை பாதுகாக்கக்கூடிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக வீடியோவில் கமெண்டுகளை இணையவாசிகள் பதிவிட்டுள்ளனர். அதில், “நமது அரசு உயிரினங்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருக்கிறது”, “தாக்குதல் நடத்திய நபர்  சமூகத்திற்கு பாதுகாப்பானவர் அல்ல.  அவர்களுக்கு மனநல உதவி அவசியமாக தேவைப்படுகிறது” என விமர்சித்துள்ளனர்.

Also Read: இந்த க்யூட் சிறுமி யார் தெரியுமா? பல ரசிகர்களின் கனவு தேவதை!

விலங்குகள் நல சட்டம் சொல்வது என்ன?

ஹரியானா மாநிலத்தை அடிப்படையாக கொண்டு தேசிய விலங்குகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் மீன்வளம் , கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை ஆகிய அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கும் சட்டப்பூர்வ ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 1962 ஆம் ஆண்டில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 இன் பிரிவு 4 இன் கீழ் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டது. மொத்தம் 28 உறுப்பினர்களை கொண்டு 3 ஆண்டுகாலம் பணிக்காலம் என்ற சூழற்சி அடிப்படையில் பணியாற்றுகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை மனிதர்களைப் போல விலங்களுக்கும் சுதந்திரத்துடன் வாழும் உரிமை, கண்ணியத்துடன் இறக்கும் உரிமை உண்டு என வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதேசமயம் விலங்குகள் மீது தாக்குதல் நடக்கும்போது அபராதம், சிறை தண்டனை போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் தெரு நாய்கள் மீதான தாக்குதல் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதாவது நாய், மாடு, பூனை தொடங்கி பறவைகள் வரை அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

அதேசமயம் இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் உள்ளது. இது சமீபகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்களும், வீடியோக்களும் வெளியாகி வருகிறது. தெரு நாய்களை கட்டுப்பத்துவது என்பது சம்பந்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியின் கடமையாகும். தெரு நாய்கள் தொல்லை குறித்த புகார்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அதைவிடுத்து தற்காப்பு தவிர்த்து உயிரினங்கள் மீதான தாக்குதல் சட்டப்படி குற்றம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Latest News