5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Gujarat Flood |குஜராத்தை சேர்ந்த தம்பதி இருவர் காரில் ஆற்றை கடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவரும் சிக்கிக்கொண்டுள்ளனர். தண்ணீரின் அளவு அதிகரிக்கவே அந்த தம்பதி, தண்ணீரில் அடித்து செல்லாமல் இருக்க காரின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டுள்ளனர்.

Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Updated On: 10 Sep 2024 13:29 PM

ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட தம்பதி : குஜராத் மாநிலம் சபர்கந்தா என்ற பகுதியில் திடீர் வெள்ளத்தால் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட தம்பதியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தம்பதி இருவர் காரில் ஆற்றை கடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவரும் சிக்கிக்கொண்டுள்ளனர். தண்ணீரின் அளவு அதிகரிக்கவே அந்த தம்பதி, தண்ணீரில் அடித்து செல்லாமல் இருக்க காரின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டுள்ளனர். தண்ணீர் வரத்து குறையாத நிலையில் பல மணி நேரமாக அவர்கள் காரின் மீதே அமர்ந்துக்கொண்டிருந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தம்பதிக்கு உதவி செய்ய முயன்றுள்ளனர். ஆனால், தண்ணீர் வரத்து குறையாததாலும், தண்ணீரின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்ததாலும் அவர்களை உடனடியாக காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : தாயை காப்பாற்ற ஆட்டோவையே தூக்கிய சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு – நடு ஆற்றில் சிக்கிக்கொண் தம்பதி

உடனடியாக இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை தொடங்கினர். தண்ணீர் வரத்து குறைவதற்காக சிறிது நேரம் காத்திருந்த குழு, தண்ணீரின் வரத்து குறைய தொடங்கியதும் மீட்பு பணியை தொடங்கியுள்ளது. அதன் மூலம் அந்த தம்பதி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தம்பதி தண்ணீரில் சிக்கிக்கொண்டிருந்த வீடியோவும், அவர்கள் மீட்கப்படும் வீடியோவும் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் கவனத்தை ஈர்த்த தம்பதி

நடு ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டால் எவ்வளவு பயமாக இருக்கும். ஆனால் இந்த தம்பதியோ துளியும் பயம் இன்றி காரின் மீது அமர்ந்துக்கொண்டிருந்துள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோக்களில் சீறிப்பாயும் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டிருக்கும் தம்பதி, காரின் மீது அமர்ந்துக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதை பார்ப்பதற்கு ஏதோ வீட்டின் வாசலில் அமர்ந்து சாவகாசமாக பேசுவது போல இருக்கிறது. திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட அந்த தம்பதி சாவகாசமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது மட்டுமன்றி ஆற்றை சுற்றி நிண்றுக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு கைகளையும் காட்டி சிரித்துள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது.

தம்பதியின் செயலுக்கு இணையத்தில் குவியும் கமெண்டுகள்

நடு ஆற்றில் சிக்கிக்கொண்டிருந்த நிலையில் பேசி சிரித்துக்கொண்டு, பொதுமக்களுக்கு கைகளை காட்டிய தம்பதியின் வீடியோ குறித்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். எத்தகைய இக்கட்டான சூழல் என்றாலும் கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் எந்த ஒரு சூழலிலும் பதட்டம் அடையாமல் பொருமையாக கையாளுவதன் மூலம் பல பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். உறுதியான உள்ளம் இருந்தால் எத்தகைய பிரச்னையாலும் அதை மிகவும் சுலபமாக கடந்துவிட முடியும் என்பதை இந்த தம்பதியினர் உணர்த்தியுள்ளனர் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு தம்பதியின் மன தைரியம் மற்றும் செயல்களை குறித்து பலரும் நகைச்சுவையாகவும், ஆதரவு தெரிவித்தும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : முதலையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

மின்னல் வேகத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்

சமீப காலமாக சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது மற்ற நாடுகளுக்கு, மாநிலங்களுக்கு தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுகிறது. இந்த நிலையில் குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News