5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Ola Driver Slapped student | முன்பெல்லாம் எங்காவது பயணிக்க வேண்டும் என்றால் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளை தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். கார், பை உள்ளிட்ட சின் சொந்த வாகனங்கள் வைத்திருந்தவர்கள் தங்களின் வாகனங்களில் பயணித்தனர். சொந்த வாகனங்கள் இல்லாதவர்களுக்கு பொது போக்குவரத்து தான் ஆதாயம்.

Viral Video : ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Sep 2024 12:38 PM

பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம் : பெங்களூருவில் அட்டோவை புக் செய்துவிட்டு பிறகு கேன்சல் செய்த கல்லூரி மாணவியை ஓலா டிரைவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோம் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஓட்டுநரின் செயலுக்கு கடும் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஆட்டோ புக் செய்யும்போது நடந்தது என்ன, மாணவியை கன்னத்தில் அறைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கல்லூரி மாணவியை கன்னத்தில் அறைந்த ஓலா ஓட்டுநர்

பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஓலாவில் ரைட் புக் செய்துள்ளார். ரை புக் ஆக நேரம் எடுக்கும் என்பதால் அந்த பெண்ணின் நண்பரும் மற்றொரு ரைட் புக் செய்துள்ளார். கல்லூரி மாணவி புக் செய்த ஆட்டோ வருவதற்கு சற்று தாமதமான நிலையில் தனது நண்பர் புக் செய்த ஆட்டோவில் இருவரும் பயணம் செய்ய முடிவு செய்து ஆட்டோவில் ஏறியுள்ளனர். அதுமட்டுமன்றி தான் புக் செய்த ஆட்டோவையும் மாணவி கேன்சல் செய்துள்ளார். மாணவி ஆட்டோவை கேன்சல் செய்ததால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் மாணவியும் அவரது நண்பரும் பயணம் செய்த ஆட்டோவை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமன்றி மாணவியை அவர் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்த நிலையில் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அட்டோ ரைடை கேன்சல் செய்ததற்காக ஆட்டோ டிரைவர் கல்லூரி மாணவியை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணத்தை எளிதாக்கும் மொபைல் செயலிகள்

தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது. எந்த துறையையும் தொழில்நுட்பம் விட்டு வைக்கவில்லை என்றால் அது மிகை ஆகாது. காரணம், சேவைகளை எளிதாக இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவ்வாறு பொதுமக்களின் பயணத்தை எளிதாக்க உருவாக்கப்பட்டது தான் இந்த ஓலா, ஊபர் உள்ளிட்ட செயளிகள். முன்பெல்லாம் எங்காவது பயணிக்க வேண்டும் என்றால் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளை தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். கார், பை உள்ளிட்ட சின் சொந்த வாகனங்கள் வைத்திருந்தவர்கள் தங்களின் வாகனங்களில் பயணித்தனர். சொந்த வாகனங்கள் இல்லாதவர்களுக்கு பொது போக்குவரத்து தான் ஆதாயம். பொது போக்குவரத்திற்கு பிறகு மக்கள் ஆட்டோவின் அதிகம் பயணிக்க தொடங்கினர். ஆனால் இந்த ஆட்டோ பயணங்களிலும் மீட்டர், கூடுதல் கட்டணம் என பல பிரச்னைகள் எழுவது தொடர் கதையாக இருந்தது.

இதையும் படிங்க : Viral Video : தாயை காப்பாற்ற ஆட்டோவையே தூக்கிய சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் தான் ஓலா, ஊபர் உள்ளிட்ட மொபைல் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த செயலிகளை பயன்படுத்தி நீங்கள் புறப்படும் இடம் மற்றும் சென்று சேர வேண்டிய இடம்  ஆகியவற்றை பதிவிட்டால் மட்டுமே போதும். அது எந்தனை கிலோ மீட்டர், எவ்வளவு கட்டணம் மற்றும் எத்தனை மணிக்கு நீங்கள் அந்த இடத்திற்கு சென்று சேறுவீர்கள் உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துவிடும். முன்னதாக  ஆட்டோ மீட்டர் பிரச்னை இருந்த நிலையில், இதில் அதுபோன்ற பிரச்னைகள் இல்லை. காரணம் இத்தனை கிலோ மீட்டருக்கு இவ்வளவு கட்டணம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் லைவ் டிராக்கிங் உள்ளிட்ட பல அம்சங்களும் இதில் உள்ளதால் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆனால் இதில் பல சிக்கல்களும் உள்ளன. அவ்வாறு சமீபத்தில் பெங்களூருவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News