Viral Video : தாயை காப்பாற்ற ஆட்டோவையே தூக்கிய சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Tamil News | Viral video of school girl lifted auto with bare hands to save her mother goes viral on internet | TV9 Tamil

Viral Video : தாயை காப்பாற்ற ஆட்டோவையே தூக்கிய சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Published: 

09 Sep 2024 15:48 PM

Small Girl | இணையத்தில் வைரலாகி வரும் அந்த சிசிடிவி காட்சியில் சாலையில் ஒருபுறத்தில் இருந்து பெண் ஒருவர் மறுபுறத்திற்கு சாலையை கடக்கிறார். அப்போது வாகனம் வருவதை கவனிக்காத அந்த பெண் ஓடியபடி சாலையை கடக்கிறார். அப்போது அந்த பக்கம் வந்த அந்த பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், கீழே விழுந்த பெண்ணின் மீது ஆட்டோ சாய்ந்து விடுகிறது.

Viral Video : தாயை காப்பாற்ற ஆட்டோவையே தூக்கிய சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Follow Us On

ஆட்டோவை தூக்கிய சிறுமி : கர்நாடகா மாநிலம் மங்களூருவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையை கடக்க முயற்சித்த பெண் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான நிலையில் சாலையின் மறுபுறம் நின்றுக்கொண்டிருந்த அந்த பெண்ணின் மகள் அலறி துடித்துக்கொண்டு ஓடி தாயை காப்பாற்ற ஆட்டோவை தூக்கிய சம்பவத்தின் வீடியோ தான் அது. இந்த வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், தன் தாய் மீது அந்த சிறுமி வைத்துள்ள அளவில்லா அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : Jayam Ravi Divorce: காத்திருந்து திருமணம் செய்தும் என்ன பலன்?.. ஜெயம் ரவி விவகாரத்தால் குமுறும் ரசிகர்கள்!

சிசிடிவி காட்சிகள் பதிவான விபத்து காட்சிகள்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த சிசிடிவி காட்சியில் சாலையில் ஒருபுறத்தில் இருந்து பெண் ஒருவர் மறுபுறத்திற்கு சாலையை கடக்கிறார். அப்போது வாகனம் வருவதை கவனிக்காத அந்த பெண் ஓடியபடி சாலையை கடக்கிறார். அப்போது அந்த பக்கம் வந்த ஆட்டோ, அந்த பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், கீழே விழுந்த பெண்ணின் மீது ஆட்டோ சாய்ந்து விடுகிறது. இதனால் பதறிப்போன அந்த பெண்ணின் மகளான சிறுமி அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார். பிறகு சற்றும் யோசிக்காத அந்த சிறுமி ஆட்டோவை தூக்குகிறார். பிறகு அங்கிருந்தவர்களின் உதவி சில நொடிகளிலேயே பெண்ணின் மீது விழுந்த ஆட்டோ அப்புறப்படுத்தப்பட்டுகிறது. பிறகு அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று அந்த பெண்ணுக்கு உதவி செய்யும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்

இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த சிறு வயதில் தனது தாயை காப்பாற்ற சிறுமி செய்த செயல் அசாத்தியமானது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். நாம் எவ்வளவு தைரியாமாக பிரச்னைகளை கையாள வேண்டும் என்பதை இந்த சிறுமியிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். அந்த சிறுமி தைரியமானவராக இருக்கிறார் என்றும், சிறுமியின் தைரியத்தை பாராட்டுவதாகவும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : OnePlus : பச்சை கோடு முதல் மதர்போர்டு பிரச்னை வரை.. நீண்ட விளக்கமளித்த ஒன்பிளஸ் நிறுவனம்!

வேகமாக இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Viral Video : அதிகாரிகள் முன்பு சீருடையை கழட்டி எறிந்த காவலர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த ஜோடி.. வலுக்கும் கண்டம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : பாதுகாப்பின் உச்சம்.. மகளின் தலையில் சிசிடிவி கேரமா பொருத்திய தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!
Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : தாசில்தார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version