5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : உண்டியல் பணத்தை திருடும் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Temple Donation | பெங்களூருவில் பிரசித்தி பெற்ற காலி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கோயிலுக்கு வரும் ஊழியர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்தில், கோயிலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

Viral Video : உண்டியல் பணத்தை திருடும் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ!
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 29 Sep 2024 15:07 PM

பெங்களூருவில் உள்ள கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை ஊழியர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலையும், கோயில் பொருட்களையும் பாதுகாக்க வேண்டிய ஊழியர்களே இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனெவே திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோயில் பணத்தை ஊழியர்களே திருடும் வீடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்த முழு தகவலை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : TN Cabinet Reshuffle: செந்தில் பாலாஜி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு எந்த துறை?

காணிக்கை பணத்தை திருடும் கோயில் ஊழியர்கள்

பெங்களூருவில் பிரசித்தி பெற்ற காலி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கோயிலுக்கு வரும் ஊழியர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்தில், கோயிலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், காணிக்கை செலுத்தப்பட்ட பணத்தில் இருந்து ஊழியர்கள் பணத்தை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Mini – Moon: அடடே..! இன்று முதல் பூமியில் இரண்டு நிலவுகள் தோன்றும்.. இதனை எப்படி பார்ப்பது?

இணையத்தில் வைரலாகும் சிசிடிவி

இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சியில், சிலர் கோயில் உண்டியலில் காணிக்கையாக வந்த பணத்தை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அதன் அருகில் ஒரு மேசை அமைத்து அதன் மீது ரூபாய் நோட்டு கட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அப்போது அங்கு நீல நிற டி சர்ட் அணிந்து வரும் நபர் ஒருவர் அந்த மேசையில் இருந்து ஒரு கட்டு பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார். பிறகு அதை ஒரு பூசாரியிடம் ஒப்படைக்கிறார். பணத்தை வாங்கிக்கொள்ளும் பூசாரி, வேகவேகமாக அறைக்குள் நடத்து செல்கிறார். இவை அணைத்தும் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இணையத்தில் வலுக்கும் கண்டம்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோயிலையும், கோயில் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய ஊழியர்களே இப்படி செய்தால் என்ன எப்படி என் பலரும் தங்களது ஆதங்கத்தை பகிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Tamilnadu Cabinet Reshuffle: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..

இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

Latest News