Viral Video : முதலையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
Crocodile | கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் குடியிருப்பு பகுதிகளில் 15 அடி நீள முதலை சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதலையை இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் கனமழை : குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவியது. கடைகள், வணிக வளாகங்களிலும் மழை நீர் தேங்கியதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கொட்டித் தீர்து கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தில் எருமை மாடுகள் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் குடியிருப்பு பகுதிகளில் 15 அடி நீள முதலை சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதலையை இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த இளைஞர்கள், ஏன் முதலையை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள் என விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Mobile Listening : உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் மொபைல் போன்கள்.. உறுதி செய்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்!
இருசக்கர வாகனத்தில் முதலையை எடுத்துச் சென்ற இளைஞர்கள்
குஜராத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் முதலைகள் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகி வந்தன. கனமழையின் காரணமாக விஸ்வமித்ரா ஆற்றில் இருந்து வெளியேரியதாக கூறப்படும் இந்த முதலைகள், குஜராத்தின் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்தன. பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் படி, அவை வனத்துறையினர் மூலம் மீட்கப்பட்டன. இந்த நிலையில் இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் முதலையை எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
Two young men took a crocodile found in Vishwamitra river in Vadodara to the forest department office on a scooter🫡
pic.twitter.com/IHp80V9ivP— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 1, 2024
இது குறித்து வெளியான தகவலின் படி, அந்த இரண்டு இளைஞர்களும் இந்திய மருத்துவ ஆணையத்தின் தன்னார்வளர்கள் என்று தெரியவந்துள்ளது. கனமழை காரணமாக ஆற்றில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்த முதலையை வடோட்ராவில் இருந்து வனத்துறைக்கு இளைஞர்கள் கொண்டு செல்லும் வழியில் இந்த விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் முதலை இளைனஞர்களை கடித்துவிடாத வகையில் கால்கள் மற்றும் வாய் பகுதி கட்டப்பட்டிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்ததாழ்வு பகுதி.. தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை..
இந்த நிலையில் இளைஞர்கள் முதலையை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் கீழ் பலரும் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.