5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video: சாலையை கடந்த அனகோண்டா.. ஷாக் ஆன பயணிகள்!

anaconda crossing the road: அனகோண்டா பாம்பு ஒன்று சாலையை கடக்கும் பிரமிப்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்துள்ளனர்.

Viral Video: சாலையை கடந்த அனகோண்டா.. ஷாக் ஆன பயணிகள்!
சாலையை கடந்த அனகோண்டா
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 12 Dec 2024 14:22 PM

சாலையை கடந்த அனகோண்டா பாம்பு வீடியோ: இந்திய காடுகளில் பல வகையான அதிக விஷம் கொண்ட பாம்புகள் உள்ளன. இந்தப் பாம்புகள் காரணமாக ஒரு காலத்தில் இந்தியாவை பாம்புகளின் தேசம் என மக்கள் அழைத்தனர். இந்தப் பாம்பு வகைகளில் மிகப் பெரியது அனகோண்டாக்கள் எனப்படும் பாம்புகள் ஆகும். இந்த வகை பாம்புகள் பெரும்பாலும் இந்தியாவில் காணப்படுவது இல்லை. பெரும்பாலும், இந்த வகை பாம்புகள் தென் அமெரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. மேலும், இந்தப் பாம்புகளில் ஒரு தனித்துவமான விஷயம் என்னவென்றால் இவை பார்க்கதான் உருவத்தில் பெரிதாக காணப்படும். மாறாக, அதிக விஷத் தன்மை கொண்டிருக்காது. காரணம், இந்தப் பாம்புகள் போஅஸ் இனத்தை சேர்ந்தவை ஆகும்.

சிறப்பு வாய்ந்த பச்சை அனகோண்டா பாம்புகள்

பொதுவாக போஅஸ் வகை பாம்புகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவைகளாக இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது. இதிலும், அனகோண்டா பாம்பு வகைகளில் பச்சை பாம்புகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் 30 அடி வரை உயரம் கொண்ட அனகோண்டா பாம்புகள் காணப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் 30 அடிக்கும் மேலான அனகோண்டா பாம்பு ஒன்று கண்டறியப்பட்டதாகவும், அந்தப் பாம்பு ஆராய்ச்சி என்ற பெயரில் கொல்லப்பட்டதாகவும் மேற்கு உலகில் இன்றளவும் சர்ச்சை ஓடுகிறது.

இதையும் படிங்க : உத்தரப் பிரதேசம் டூ பீகார்.. 98 கி.மீ டிரக்கில் பயணித்த ராட்சத மலை பாம்பு!

மனிதர்களை இரையாக உண்ணுமா?

மேலும், மேற்கு உலகில் அனகோண்டா பாம்புகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் மட்டுமின்றி கட்டுக்கதைகளும் உள்ளன. இந்தக் கட்டுக் கதைகள் பின்னாள்களில் மேலும் புனையப்பட்டு சினிமாக்களில் கதைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், அதிகளவு அனகோண்டா பாம்புகள் அமேசான் காடுகளில் வாழ்கின்றன என்பது உண்மை. மேலும், இவை மனிதர்களை தாக்கினாலும் இரையாக உண்ணாது என்றும் கூறப்படுகிறது.

அனகோண்டா இரைகள் என்ன?

அப்படியெனில் அனகோண்டா பாம்பின் இரைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை, பெரும்பாலும் ஆறுகளில் உள்ள மீன்களை உண்ணுகின்றன.
மேலும், ஆற்றின் அருகில் வரும் குதிரைகள், ஆடுகள் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி உண்ணும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், இது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வு என்றும் அவர்கள் கூநுகின்றனர். மேலும், இந்தப் பாம்புகள் இரையை நொறுக்கி உண்ணும் தன்மை கொண்டவை. ஆகவே சிக்கினால் சின்னாபின்னமாக்கி விடும் என்பதும் விஞ்ஞானிகள் கருத்தாகும்.

எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றன?

அனகோண்டா பாம்புகள் பெரும்பாலும் தென் அமெரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. இதில் மஞ்சள் அனகோண்டா பாம்புகள் கிழக்கு பிரேசிலில் காணப்படுகின்றன.
பிரான்சின் கடலோரப் பகுதிகளில் கரும்புள்ளி கொண்ட அனகோண்டா பாம்புகள் காணப்படுகின்றன. எனினும், அளவில் பெரிய அனகோண்டா பாம்புகள் தென் அமெரிக்க காடுகளில்தான் காணப்படுகின்றன.

சாலையை கடந்த அனகோண்டா

இந்நிலையில் சாலையை அனகோண்டா பாம்பு கடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது, “நேச்சர் இஸ் அமேசிங்” என்ற ட்விட்டர் கணக்கில் வெளியாகிவுள்ளது. இந்த வீடியோவில் சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்தபடியே அனகோண்டாவை படமாக்குவதை பார்க்கலாம்.

இதையும் படிங்க: மனிதன் போல் படிக்கட்டு ஏறிய நாய்.. வைரல் வீடியோ!

Latest News