Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது காகமா, முகமா?.. அதை வைத்தே உங்கள் ஆளுமை பண்பை சொல்லாம்!
Man and Crow | தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படம் பார்ப்பதற்கு ஒரே ஒரு புகைப்படம் போல தோன்றுகிறது. ஆனால் இந்த புகைப்படத்தில் பல்வேறு உருவங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, காகம், மனித முகம் உள்ளிட்ட சில உருவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒளியியல் மாயை என்பது தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. இந்த ஒளியியல் மாயையில், ஒரே புகைப்படத்தில் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த புகைப்படத்தை நன்கு உற்று கவனிக்கும் போதுதான் அதில் பல உருவங்கள் இடம்பெற்றிருப்பதை நம்மால் அறிந்துக்கொள்ள முடியும். அவ்வாறு அது ஒளியியல் மாயை புகைப்படம் என தெரியாமல் பார்ப்பபர்களுக்கு முதலில் அந்த புகைப்படத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு உருவம் மட்டுமே தெரியும். அவ்வாறு, ஒளியியல் மாயை புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு உருவம் தெரிவதற்கு பின் ஒரு உலவியல் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் மூலம் ஒருவரின் பண்புகளை தெரிந்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது எது?.. முதியவரா அல்லது குடையா.. உங்களது பண்புகள் இவைதான்!
வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படம்
அந்த வகையில் தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படம் பார்ப்பதற்கு ஒரே ஒரு புகைப்படம் போல தோன்றுகிறது. ஆனால் இந்த புகைப்படத்தில் பல்வேறு உருவங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, காகம், மனித முகம் உள்ளிட்ட சில உருவங்கள் இடம்பெற்றுள்ளன. பல உருவங்கள் அடங்கிய இந்த புகைப்படத்தில் நீங்கள் எந்த உருவத்தை முதலில் பார்கிறீர்களோ அந்த உருவமே உங்களது பண்புகளை கூறும் என கூறப்படுகிறது.
காகத்தை முதலில் பார்த்தவர்கள்
இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் நீங்கள் முதலில் காகத்தின் உருவத்தை பார்த்தீர்கள் என்றால், நீங்கள் எந்த ஒரு விஷயம் என்றாலும் அதற்கு விரைவில் சரியான முடிவை எடுக்கும் தன்மை கொண்டவர்கள். நீங்கம் எப்போதும் மற்றவர்களை விமர்சிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். குறிப்பாக அடுத்தவர் செய்யும் தவறுகளை அவர்களின் முகத்திற்கு முன்பாகவே அதனை கூறும் இயல்பை கொண்டவராக இருப்பீர்கள். இதன் காரணமாகவே உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்கள வெறுக்க நேரிடும். நீங்கள் ஒருவரின் குறை அல்லது தவறை அவர்களிடம் கூறுகையில் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் மீது கோபம் கொள்வது உங்கள் இருவருக்குமான உறவில் கசப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நீங்கள் அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் உங்கள் மனதில் தோன்றியதை சம்மந்தப்பட்ட நபரிடம் சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Personality Test : இளவேனில் முதல் குளிர் காலம் வரை.. உங்களுக்கு பிடித்த காலமே உங்கள் பண்புகளை சொல்லும்!
மனித முகத்தை முதலில் பார்த்தவர்கள்
இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் நீங்கள் முதலில் மனித முகத்தை பார்த்தீர்கள் என்றால், நீங்கள் எந்த ஒரு விஷயம் என்றாலும் அதில் உடனடியாக முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டும் நபராக இருப்பீர்கள். நீங்கள் இவ்வாறு தயக்கத்துடன் செயல்படுவது, உங்கள் தன்நம்பிக்கை மீது உங்களையே கேள்வி எழுப்ப செய்யும் விதமாக அமைகிறது. இந்த பண்பு காரணமாக பெரும்பாலான நேரங்களில் உங்கள் உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை கூட யாரிடமும் உங்களால் பகிர்ந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். சரியான நேரத்தில் உங்கள் உணர்வுகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்த முடியாமல் போவதால் உங்களுக்கு பிடித்த விஷயங்களை கூட நீங்கள் இழக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் நீங்கள் எந்த உருவத்தை முதலில் பார்த்தீர்களோ அதுவே உங்கள் பண்புகளை கூறும் என்பது குறிப்பிடத்தக்கது.