Viral Video : விமான நிலையத்தில் மாரடைப்பு வந்து மயங்கி விழுந்த முதியவர்.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Doctor saved old man life | டெல்லி விமான நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். கீழே விழுந்த அவர் மூச்சு, பேச்சின்றி கிடந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் முதியவருக்கு CPR முதலுதவி சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றியுள்ளார்.
வைரல் வீடியோ : முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அது உலகிற்கு தெரியவர நீண்ட நேரம் எடுக்கும் . தொலைத்தொடர்பு வசதி குறைபாடு காரணமாக எந்த ஒரு செய்தியானாலும் அது நடந்து முடிந்து 24 மணி நேரம் கழித்து தான் செய்தி தாள்கள் மூலம் தெரிய வரும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. ஒரு சம்பவம் நிகழ்ந்து முடிந்த அல்லது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் போதே அது உலகிற்கு தெரிய வந்துவிடுகிறது. மக்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்ததே இதற்கு காரணமாக உள்ளது. இதன் மூலம் சில ஆசாத்தியமான சம்பவங்களும் கூட படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வைரலாகிறது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விமான நிலையத்தில் உயிருக்கு போராடிய முதியவர்
டெல்லி விமான நிலையத்தில் மாரடைப்பு வந்து மயங்கி விழுந்த முதியவரை, பெண் மருத்துவர் முதலுதவி செய்து காப்பாற்றும் வீடியோ தான் அது. டெல்லி விமான நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். கீழே விழுந்த அவர் மூச்சு, பேச்சின்றி கிடந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் முதியவருக்கு CPR முதலுதவி சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
CPR முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெண் மருத்துவர்
இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் மூச்சு, பேச்சின்றி அசைவற்று கிடக்கிறார். அவருக்கு மருத்துவர் CPR சிகிச்சை அளிக்கிறார். நீண்ட நேரம் சிகிச்சை அளித்தும் முதியவரின் உடலில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இருப்பினும் அந்த மருத்துவர் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார். சிறிது நேரம் கழித்து முதியவர் கண் விழித்து பார்க்கிறார். அதனை கண்டு சுற்றி நின்றிருந்தவர்கள் மகிழ்ச்சியில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
Today at T2 Delhi Airport, a gentleman in his late 60s had a heart attack in the food court area.
This lady Doctor revived him in 5 mins.
Super proud of Indian doctors.
Please share this so that she can be acknowledged. pic.twitter.com/pLXBMbWIV4
— Rishi Bagree (@rishibagree) July 17, 2024
மருத்துவருக்கு குவியும் பாராட்டு
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடுரோட்டில் வெட்டி கொலை செய்தாலும் கண்டும் காணாமல் போகும் மக்கள் மத்தியில் ஒரு முதியவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர் எடுத்த முயற்சி பாராட்டுக்குறியது என பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.