5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Personality Test : உங்கள் விழிகளின் நிறத்தை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என சொல்லிவிடலாம்!

Eye Colour | ஒரு மனிதனின் கண்களை வைத்தே அந்த நபர் கோபமாக இருக்கிறாரா அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறார என்பதை அறிந்துக்கொள்ள முடியும். அவ்வாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய முக்கிய உறுப்பாக கண்கள் உள்ள நிலையில், ஒருவரின் கண் விழி நிறத்தை வைத்தே அவர் எத்தகைய பண்புகளை உடையவர் என்று சொல்ல முடியுமாம்.

Personality Test : உங்கள் விழிகளின் நிறத்தை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என சொல்லிவிடலாம்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 06 Nov 2024 14:06 PM

மனித உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பு என்றால் அவை கண்கள் தான். கண்கள் இல்லை என்றால் மனிதர்களால் பெரும்பாலான வேலைகளை செய்ய முடியாது. ஏனென்றால் கண்கள் தான் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், மனிதர்கள் ஆகியவற்றை பார்க்க உதவுகிறது. கண்கள் இல்லையென்றால் அதையெல்லாம் செய்ய முடியாது. ஒரு மனிதனின் கண்களை வைத்தே அந்த நபர் கோபமாக இருக்கிறாரா அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறார என்பதை அறிந்துக்கொள்ள முடியும். அவ்வாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய முக்கிய உறுப்பாக கண்கள் உள்ளன.

இதையும் படிங்க : Viral Video : இடம் இல்லாததால், ரயில் பெட்டியில் படுக்கை தயாரித்த பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கண் விழியின் நிறங்களே பண்புகளை சொல்லும்

கண்களில் உணர்ச்சிகள் மட்டுமன்றி ஒரு மனிதனின் பண்பையும் உணர்ந்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. பொதுவாக மனிதர்களின் கண் விழிகளின் நிறங்கள் மாறுபடும். ஒவ்வொருவரின் கண் விழிகளும் கருப்பு, பிரவுன், பச்சை, நீலம் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இருக்கும். இந்த ஒவ்வொரு நிறம் கொண்ட விழிகள் கொண்ட நபருக்கும் ஒவ்வொரு பண்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. அவை என்ன என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : WhatsApp : இனி போலி புகைப்படங்களுக்கு வாய்ப்பே இல்லை.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ள வாட்ஸ்அப்!

பண்புகள்

பிரவுன் நிற விழிகள்

பிரவுன் நிற கண் விழிகளை கொண்டவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மிகவும் நட்பாக பழகுவதும் அவர்களது சிறந்த பண்பாக இருக்கும். பிரவுன் நிற விழிகளை கொண்டவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்றும், அவர்கள் வாழ்க்கையில் பெயர், பணம், உறவு ஆகியவற்றை எளிதில் சம்பாதித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி பிரவுன் நிற விழிகளை கொண்டவர்கள் எதை விரும்பினாலும் அது அவர்களுக்கு கிடைத்துவிடும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : US Election Results 2024: பட்டையை கிளப்பிய ட்ரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி!

கருப்பு நிற விழிகள்

கருப்பு நிற விழிகளை கொண்டவர்களுக்கு மிக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை தத்துவமாக பின்பற்றுவார்கள். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும், முயற்சித்து அந்த வேலையை செய்து முடித்து விடுவார்கள். மேலும், கருப்பு நிற விழிகள் கொண்டவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தை அனுபவித்து வாழும் பண்பு கொண்டவர்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : MIS : எந்தவித உழைப்பும் இன்றி மாதம் ரூ.5,500 வருமானம்.. அசத்தல் அம்சங்களை வழங்கும் மாத வருமான திட்டம்!

வெளிர் பச்சை விழிகள்

வெளிர் பச்சை நிற விழிகளை கொண்டவர்கள் மற்றவர்களை விட தனித்துவமாக தெரிவார்களாம். அழகில் மட்டுமன்றி, புத்திசாலிதனத்திலும் இவர்களை யாராலும் வெல்ல முடியாதாம். இந்த நிற கண்கள் உள்ளவர்கள் தங்களின் புத்திசாலி தனத்திற்கு மற்றவர்களிடம் அதிக பாராட்டுக்களை பெறுகிறார்கள் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : X Platform : இனி எக்ஸ் தளத்தில் இந்த தொல்லை இல்லை.. Block ஆப்ஷன் விரைவில் அறிமுகம்!

நீல நிற விழிகள்

நீல நிற விழிகளை உடையவர்கள் வாழ்க்கையில் உயர் அந்தஸ்து, அதிக பணம் மற்றும் புகழ் ஆகியவற்றுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த நபர்களுக்கு அதுவே பலவீனமாகவும் இருக்கும். நீல நிற கண்கள் உடையவர்கள் அடிக்கடி தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி சிரமப்படுவார்கள் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : UPI : நெட்வொர்க் இல்லாமல் UPI-ல் பணம் அனுப்பலாம்.. முழு விவரம் இதோ!

சாம்பல் நிற விழிகள்

சாம்பல் நிற விழிகளை உடையவர்கள் சக்தி வாய்ந்த ஆளுமை பண்பை கொண்டிருப்பார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவதால், சிறிய விஷயங்களுக்காக கூட வருத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் தங்களது கனவுகளை நனவாக்கும் ஆளுமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News