லப்பர் பந்து படத்திலிருந்து வெளியானது ‘ஆச ஒரவே’ வீடியோ பாடல் - Tamil News | Aasa Orave Video song from Lubber Pandhu movie out now | TV9 Tamil

லப்பர் பந்து படத்திலிருந்து வெளியானது ‘ஆச ஒரவே’ வீடியோ பாடல்

Published: 

04 Oct 2024 12:12 PM

Lubber Pandhu - Aasa Orave Video | ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow Us On

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்திலிருந்து வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்திலிருந்து ‘ஆச ஒரவே’ என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version