புஷ்பா 2 படத்திலிருந்து வெளியான பீலிங்ஸ் வீடியோ பாடல்..!
PEELINGS Video Song : தெலுங்கு திரைப்பட இயக்குநர் சுகுமார் இயக்கத்திலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி நிறுவனத்தில் உருவாக்கத்திலும் கடந்த டிசம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் புஷ்பா 2. நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்திலிருந்து "பீலிங்ஸ்" என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முன்னணி நடிப்பில் மிகப் பிரம்மாண்ட வரவேற்புடன் வெளியான திரைப்படம் புஷ்பா 2. கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்துடன் உருவான இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகர்கள் ஃபகத் பாசில், சுனில், ஜெகபதி பாபு , தனஞ்சயா மற்றும் ராவ் எனப் பல பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் த்ரில்லர் என மாறுபட்ட கதைகளுடன் வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் வசூலில் சுமார் ரூ 294 கோடியை வசூல் செய்து பெரிய சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து 10 நாட்களின் முடிவு சுமார் ரூ 1292 கோடிகளை வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாகியது.
இசையமைப்பாளராக இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில், இப்படத்திலிருந்து வெளியான புஷ்பா ராஜ், கிஸ்ஸிக், சாமி மற்றும் பீலிங்ஸ் போன்ற லிரிக்கல் பாடல்கள் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் புஷ்பா 2 படத்திலிருந்து “பீலிங்ஸ்” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.. கோயில் விவகாரத்தில் இளையராஜா விளக்கம்