வெளியானது அர்ஜுன் தாஸிலின் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர்..! - Tamil News | Actor Arjun Das aditi shankar Once More Movie Title Teaser Out Now | TV9 Tamil

வெளியானது அர்ஜுன் தாஸிலின் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர்..!

Published: 

05 Oct 2024 22:05 PM

Once More Title Teaser : தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் இந்த "ஒன்ஸ் மோர்". இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநரான விக்னேஷ் ஸ்ரீ காந்த் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை யுவராஜ் கணேஷ் தயாரித்து வருகிறார். தற்போது இத்திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us On

ஒன்ஸ் மோர் : அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீ காந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் இந்த ‘ஒன்ஸ் மோர்”. இத்திரைப்படத்தைத் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு “ஒன்ஸ் மோர்” என்ற டைட்டிலை இப்படக்குழு வைத்திருக்கிறது. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :பூஜையுடன் தொடங்கியது விஜயின் ‘தளபதி 69’ படப்பிடிப்பு – வைரலாகும் போட்டோஸ்

நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version