5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Meiyazhagan: மெய்யழகன் திரைப்படத்திலிருந்து “ஊர் மண்ணே” வீடியோ பாடல் இதோ..!

தமிழ்த் திரைப்பட பிரபல நடிகர்கள் கார்த்திக் மாறும் அரவிந்த் சாமியின் முன்னணி நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டைமெண்ட் தயாரிப்பில் இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கியுள்ளார். தஞ்சை கிராம மக்களின் பேச்சு வழக்கில் சாதாரண திரைக்கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு தமிழ் மக்களிடையே நல்ல தற்போது பெற்று வருகிறது.

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 22 Oct 2024 22:57 PM

ஊர் மண்ணே : 96 திரைப்பட பிரபல இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, கார்த்திக்,நடிகை ஸ்ரீ திவ்யா மற்றும் ராஜ்கிரண் ஆகியவர்களின் அற்புதமான நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். இத்திரைப்படத்திற்கு  கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள நிலையில் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ல் வெளியாகிய இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அழகிய கிராம உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் பல் நடிகர்களால் நல்ல விதத்தில் பாராட்டப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக்கின் 27வது திரைப்படமான இது அவரின் சொந்த விருப்பத்தால் திரைப்படம் உருவாக்கியது என கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகின்ற அக்டோபர் 25ல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திலிருந்து “ஊர் மண்ணே” என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Latest Stories