5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மெய்யழகன் திரைப்படத்திலிருந்து வெளியான “போறேன் நா போறேன்” வீடியோ பாடல் இதோ..!

மெய்யழகன் நடிகர் கார்த்திக்கின் 27வது திரைப்படமான இது மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பைத் தந்துள்ளது. மெய்யழகன் திரைப்படம் தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம மக்களில் பேச்சுவழக்கில் மிகவும் அற்புதமான திரைப்படமாக அமைந்துள்ளது. இத்திரைப்படம் வெளியாகி தற்போதுவரை சுமார் ரூ.1.32 கோடி வசூல் செய்துள்ளதாம்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 20 Oct 2024 21:48 PM

போறேன் நா போறேன் வீடியோ பாடல் : நடிகர்கள் கார்த்திக் மற்றும் அரவிந்த் சாமியின் முன்னணி நடிப்பில் உருவான படம் மெய்யழகன். இந்த படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்த திரைப்படத்தை 96 படத்தை இயக்கிய சி. பிரேம்குமார் இயக்கியிருந்தார். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் படத்தை அவரது சகோதரரும், நடிகருமான சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது.நடிகர் கார்த்திக்கின் 27வது திரைப்படமான இது மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பைத் தந்துள்ளது. மெய்யழகன் திரைப்படம் தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம மக்களில் பேச்சுவழக்கில் மிகவும் அற்புதமான திரைப்படமாக அமைந்துள்ளது. இத்திரைப்படம் வெளியாகி தற்போதுவரை சுமார் ரூ.1.32 கோடி வசூல் செய்துள்ளதாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தற்போது இவரின் இசையில் நடிகர் கமல்ஹாசன் பாடிய “போறேன் நா போறேன்” என்ற அற்புதமான பாடல் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இப்பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Latest Stories