Bloody Beggar: 25 லட்சம் பேர் பார்வையிட்ட கவினின் “ப்ளடி பெக்கர்” ட்ரைலர் இதோ..! - Tamil News | Actor Kavin Bloody Beggar Movie Trailer Out and Trending on social media | TV9 Tamil

Bloody Beggar: 25 லட்சம் பேர் பார்வையிட்ட கவினின் “ப்ளடி பெக்கர்” ட்ரைலர் இதோ..!

Updated On: 

19 Oct 2024 18:28 PM

Bloody Beggar : தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் மற்றும் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ப்ளடி பெக்கர்". இத்திரைப்படத்தில் நடிகர் கவின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாடா மற்றும் ஸ்டார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவரின் மாறுபட்ட நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ப்ளடி பெக்கர் : தமிழ் திரையுலகில் தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் கவின். தற்போது இவரின் மாறுபட்ட நடிப்பில் மிகவும் வித்தியாசமாக உருவாகிவரும் திரைப்படம் ப்ளடி பெக்கர். இத்திரைப்படத்தில் துணை நடிகர்களாக ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணு குமார், அர்ஷத், பிரியதர்ஷினி ராஜ்குமார், மிஸ் சலீமா, அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுராபந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவபாலன் முற்றிலும் நகைச்சுவை கதைக்களத்தை மையமாகக் கொண்டு இயக்கியுள்ளார். இந்த ப்ளடி பெக்கர் திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துவருகிறார். இந்த திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த ப்ளடி பெக்கர் படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : திக்.. திக்.. திகில்! ஓடிடியில் பார்க்க வேண்டிய 5 க்ரைம் த்ரில்லர் மூவிஸ்..!

முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பிரபல நடிகையுடன் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுதா?