நடிகர் சசிக்குமாரின் ‘ஃப்ரீடம்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ இதோ..! - Tamil News | Actor Sasikumar Freedom august 14 Movie Glimpse Video Out Now | TV9 Tamil

நடிகர் சசிக்குமாரின் ‘ஃப்ரீடம்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ இதோ..!

Published: 

20 Oct 2024 14:38 PM

நடிகர் சசிக்குமார் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் ஃப்ரீடம். சத்யா சிவா இயக்கத்தில் மற்றும் விஜய கணபதி பிக்ச்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாக்கி வருகிறது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக சசிக்குமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் இசையமைப்பாளராக ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படக்குழு தற்போது இப்படத்தில் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஃப்ரீடம் : தமிழ் திரைப்படங்களான கழுகு , சிவப்பு மற்றும் சவாலே சமாளி போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழில் முக்கிய இயக்குநராக இருப்பவர் சத்யா சிவா. தற்போது இவரின் இயக்கத்திலும் மற்றும் விஜய கணபதி பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகிவரும் திரைப்படம் “ஃப்ரீடம் ஆகஸ்ட் – 14”. இத்திரைப்படத்தில் நடிகர் சசிக்குமார், லேஜோமோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ்,போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா மற்றும் பாய்ஸ் மணிகண்டன் போன்ற பிரபலங்கள்  நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்காக ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மலையாம் என பழமொழிகளில் வெளியாகவுள்ளது.  தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தை அறிமுகம் செய்யும் விதத்தில் இந்த திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் அடிமட்ட வாழ்க்கை குறித்து இத்திரைப்படத்தில் கதைக்களமானது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படம் ரீலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பிரபல நடிகையுடன் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுதா?