வெளியானது மம்முட்டியின் ‘டோமினிக்’ படத்தின் டீசர்
Dominic and The Ladies Purse Official Teaser | முன்னதாக மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ளது இந்தப் படம். இந்தப் படத்தை நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ளது. முன்னதாக மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து கோகுல் சுஸ்மிதா பட், சுரேஷ், வினீத், விஜி வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் படம் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.