சிவா நடித்த சூது கவ்வும் 2 படத்தின் ’வி ஆர் நாட் சேம்’ பாடல்!
Soodhu Kavvum 2 :தமிழ்த் திரைப்படங்களில் தனது நகைச்சுவை திறமையின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மிர்ச்சி சிவா. தற்போது இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள சூது கவ்வும் 2 வரும் டிசம்பர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த 2013ம் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சூது கவ்வும்”. இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் மற்றும் சஞ்சிதா செட்டி எனப் பல முன்னணி பிரபலங்களின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக தற்போது ‘சூது கவ்வும் பாகம் 2’ உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கி உள்ளார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா முன்னணி நாயகனாக நடித்துள்ளார். சூது கவ்வும் 1ன் தொடர்ச்சி கதைகளுடன் அமையும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் மிர்ச்சி சிவாவைத் தொடர்ந்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே கார்த்தி, யோக் ஜேபி, அருள்தாஸ், ரகு, கல்கி மற்றும் கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திலிருந்து தற்போது “வி ஆர் நாட் சேம்” என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:2024ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்!