“சூது கவ்வும் 2” படத்தின் ட்ரெய்லர்.. கலகலக்க வைக்கும் சிவா!
Mirchi Shiva: தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சூது கவ்வும். தற்போது இப்படத்தின் தொடர்ச்சியாகச் சூது கவ்வும் 2 திரைப்படத்தினை இயக்குநர் எஸ்.அஜி.அர்ஜுன் இயக்கியுள்ளார். நடிகர் மிர்ச்சி சிவா முன்னணி நடிகராக நடிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரைப்பட இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் “சூது கவ்வும்”. நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோ நடித்த இந்த திரைப்படமானது பெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை அடுத்தாக தற்போது ‘சூது கவ்வும் பாகம் 2’ உருவாகியுள்ளது. இயக்குநர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கும் இந்த திரைப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்துவருகிறது. சூது கவ்வும் பாகம் 1ன் தொடர்ச்சி கதைகளுடன் அமையும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். மேலும் மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே கார்த்தி, யோக் ஜேபி, அருள்தாஸ், ரகு, கல்கி மற்றும் கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பல நடிகர்களுடன் மிகப் பிரம்மாண்ட நகைச்சுவை திரைப்படமாகத் தயாராகிவரும் இந்த படம் வருகின்ற “டிசம்பர் 13ம்” தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸிற்கு சில தினங்களே உள்ள நிலையில் சூது கவ்வும் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க :ஓடிடியில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படைத்த சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்