5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரபு தேவாவின் ஜாலியோ ஜிம்கானா படத்தின் பாடல் வெளியீடு

Police Kaarana Kattikitta Song : நடிகர் பிரபு தேவா மற்றும் நடிகை மடோனாவின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜாலியோ ஜிம்கான. சக்தி சிதம்பரம் இயக்கும் நிலையில், டிரான்ஸ் இந்தியா அண்ட் என்டேர்டைமென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. நடிகர் பிரபு தேவாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திலிருந்து தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 26 Oct 2024 21:36 PM

தமிழ்த் திரைப்பட பிரபல நடிகரும் மற்றும் நடனக் கலைஞருமான பிரபு தேவா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா. பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரான்ஸ் இந்தியா அண்ட் எண்டெர்டைமண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் துணை நடிகர்களாக மடோனா செபாஸ்டியன், அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு ஆகிய பல பிரபலங்களும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைப்பில் வெளியான “போலீஸ்காரனா கட்டிகிட்ட” என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படமானது வருகின்ற நவம்பர் 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Latest Stories