பிரபு தேவாவின் ஜாலியோ ஜிம்கானா படத்தின் பாடல் வெளியீடு - Tamil News | Actor Prabhu Deva Jolly O Gymkhana Movie Police Kaarana Kattikitta Lyrical Song Out Now | TV9 Tamil

பிரபு தேவாவின் ஜாலியோ ஜிம்கானா படத்தின் பாடல் வெளியீடு

Published: 

26 Oct 2024 21:36 PM

Police Kaarana Kattikitta Song : நடிகர் பிரபு தேவா மற்றும் நடிகை மடோனாவின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜாலியோ ஜிம்கான. சக்தி சிதம்பரம் இயக்கும் நிலையில், டிரான்ஸ் இந்தியா அண்ட் என்டேர்டைமென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. நடிகர் பிரபு தேவாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திலிருந்து தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரைப்பட பிரபல நடிகரும் மற்றும் நடனக் கலைஞருமான பிரபு தேவா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா. பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரான்ஸ் இந்தியா அண்ட் எண்டெர்டைமண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் துணை நடிகர்களாக மடோனா செபாஸ்டியன், அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு ஆகிய பல பிரபலங்களும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைப்பில் வெளியான “போலீஸ்காரனா கட்டிகிட்ட” என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படமானது வருகின்ற நவம்பர் 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
காலை வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்கள்.. அற்புதமான பலன் கிடைக்கும்
வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?
நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?