Coolie Update : ரஜினிகாந்த் நடிக்கும் கூலி பட அப்டேட்.. வெளியானது ப்ரோமோ!
Chikitu Vibe Promo : நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வேட்டையன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷ்ன் கதைகளை இயக்கி மிகவும் பிரபலமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்தின் முன்னணி நடிப்பில் கூலி திரைப்படத்தினை இயக்கி வருகிறார். ஆக்ஷன் மற்றும் மாறுபட்ட திரைக்கதைகளுடன் உருவாகிவரும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினியை தொடர்ந்து தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரன், சோப்பின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் அமீர்கான் போன்ற பல் பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினியின் இப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இன்று டிசம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்திலிருந்து “சிகிட்டு வைப்” முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகிவருவதால் இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
இதையும் படிங்க:“எல்லாம் கடவுளுக்கு தெரியும்” – போலியான தகவலுக்கு கொதித்தெழுந்த சாய் பல்லவி!