‘சொர்க்கவாசல்’ படத்திலிருந்து வெளியான காலம் தன்னாலே வீடியோ!

| Edited By: CMDoss

Dec 12, 2024 | 10:02 AM

Kaalam Thannaley Video Song : பிரபல நடிகரும் தற்போது இயக்குநராகவும் படங்களை இயக்கிவருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவரின் நடிப்பில் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். தற்போது இந்த படத்திலிருந்து "காலம் தன்னாலே" என்ற பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் சூர்யா45 திரைப்படத்தினை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரின் பிரம்மாண்ட மான நடிப்பில் வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். இப்படத்தினை இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஸ்வைப் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் முன்னணி நடிப்பில் இவருடன் செல்வராகவன், நட்டி நடராஜன், கருணாஸ் , சாமுவேல் அபியோலா ராபின்சன் , சானியா ஐயப்பன் , ஷரஃப் யு தீன் மற்றும் பாலாஜி சக்திவேல் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த சொர்க்கவாசல் திரைப்படத்திற்குப் பிரபல இசையைப்பாளர் சிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியாகியது. திரையரங்குகளில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்திலிருந்து “காலம் தன்னாலே” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:‘பென்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்.. வில்லனாகும் பிரபல நடிகர்!