’இங்க நான் தான் கிங்கு’ படத்திலிருந்து “மாயோனே” லிரிக்கல் வீடியோ - Tamil News | Actor Santhanam Inga Naan Thaan Kingu Movie Maayoney Lyrical Video Song Out Now | TV9 Tamil

’இங்க நான் தான் கிங்கு’ படத்திலிருந்து “மாயோனே” லிரிக்கல் வீடியோ

Published: 

15 Oct 2024 13:02 PM

தமிழில் பிரபல காமெடி நடிகராக வலம்வருபவர் சந்தானம். இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் "இங்க நாங்க தான் கிங்கு" திரைப்படம். இப்படத்தைப் பிரபல இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக டி. இமான் இசையமைத்துள்ளார் தற்போது இவரின் இசையமைப்பில் "மாயோனே" என்ற லிரிக்கல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாயோனே : பிரபல இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் மற்றும் ப்ரியலயா போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் “இங்க நாங்க தான் கிங்கு”. இத்திரைப்படத்தில் துணை நடிகர்களாகத் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா , பால சரவணன் , முனிஷ்காந்த் , லொள்ளு சபா மாறன் , சுவாமிநாதன் , கூல் சுரேஷ் , லொள்ளு சபா சேசு மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனம் “கோபுரம் பிலிம்ஸ்” தயாரிப்பில் அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படமாக அமைந்த இது கடந்த மே மாதம் வெளியாகியது. டி. இமான் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்திலிருந்து “மாயோனே” என்ற லிரிக்கல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பிரபல பாடகி ஜோனிட்டா காந்தி பாடியுள்ளார்.

இதையும் படிங்க :நடிகர் ஜீவாவின் பிளாக் திரைப்படத்தின் 2 நாள் வசூல் விவரம்!

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!