5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
எங்க அப்பா இருந்திருந்தா உன்ன நம்பி இருக்க உசுர காப்பாத்துனு சொல்லியிருப்பாரு... படைத்தலைவன் ட்ரெய்லர் இதோ

எங்க அப்பா இருந்திருந்தா உன்ன நம்பி இருக்க உசுர காப்பாத்துனு சொல்லியிருப்பாரு… படைத்தலைவன் ட்ரெய்லர் இதோ

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Dec 2024 21:57 PM

Padai Thalaivan Official Trailer | கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்திலிருந்து இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ’உன் முகத்தைப் பார்கையிலே’ என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘படைத்தலைவன்’. இந்தப் படத்தை இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகரும் நடன இயக்குநனருமான ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்திலிருந்து இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ’உன் முகத்தைப் பார்கையிலே’ என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த ட்ரெய்லரில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் பாடல் ஒலித்ததுடன் இறுதியில் அவர் வருவது போன்ற காட்சியும் அமைந்துள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.