Miss You: மிஸ் யூ படத்தில் இருந்து வெளியான “நீ என்ன பாத்தியே” பாடல்! - Tamil News | Actor Siddharth Miss You Movie Nee Enna Paathiye Lyrical song Out Now | TV9 Tamil

Miss You: மிஸ் யூ படத்தில் இருந்து வெளியான “நீ என்ன பாத்தியே” பாடல்!

Updated On: 

23 Oct 2024 23:20 PM

தமிழ் பிரபல நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மிஸ் யூ. இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் மற்றும் தயாரிப்பாளர் சாமுவேல் மாத்திவ் தயாரிப்பில் தற்போது உருவாகிவருகிறது. நடிகர்கள் ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பாலசரவணன், “லொள்ளுசபா” மாறன் மற்றும் சஸ்திகா போன்றவர்களின் நடிப்பில் உருவாகிவருகிறது. இத்திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் முதல் பாடல் கடந்த ஜூன் மத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இப்படத்திலிருந்து இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளது.

நீ என்ன பாத்தியே : தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவருக்கு கடந்தாண்டு வெளியான சித்தா படமும், நடப்பாண்டு வெளியான இந்தியன் 2  படமும் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. இதனிடையே களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் என்.ராஜசேகர் இயக்கத்தில் மிஸ் யூ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ஹீரோவாக சித்தார்த் நடிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த ஜூன் மாதத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் மற்றும் மாதவன் ஆகியவர்கள் இணைந்து வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து மிஸ் யூ படத்தில் துணை கதாபாத்திரங்களாக ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பாலசரவணன், “லொள்ளுசபா” மாறன், சஸ்திகா ஆகியவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஜிப்ரான் இசையில் தற்போது இரண்டாவது பாடலான “நீ என்ன பாத்தியே”என்ற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் மற்றும் ஆக்ஷன் கதைகளுடன் உருவாகிவரும் இப்படம் வருகின்ற 2025ல் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?
நடிகை அனு இம்மானுவேல் பற்றிய சுவராஸ்ய தகவல் இதோ..!
இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் - அமேசான்!
குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?