5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Kanguva Song : கங்குவா படத்தின் 'கங்கா கங்குவா' பாடல் வீடியோ!

Kanguva Song : கங்குவா படத்தின் ‘கங்கா கங்குவா’ பாடல் வீடியோ!

barath-murugan
Barath Murugan | Published: 18 Dec 2024 10:53 AM

Tamil Video Song : சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தைத் தயாரிப்பாளர் ஞானவேல் தயாரித்திருந்தார். தற்போது இப்படத்திலிருந்து கங்கா கங்குவா என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரைப்படங்களில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிறுத்தை சிவா. இவரின் 2 ஆண்டுகள் உழைப்பில் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான திரைப்படம் கங்குவா. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, நட்ராஜ், கோவை சரளா, ரவி ராகவேந்திரா மற்றும் கருணாஸ் எனப் பல பிரபலங்கள் இணைத்து நடித்திருந்தனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி க்ரியேஷன் இணைத்துத் தயாரித்துள்ளது. முற்றிலும் கற்பனை கக்கத்துடன் வெளியான இந்த திரைப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 106 கோடிகளை மட்டும் வசூல் செய்து பெரும் தோல்வியாக அமைந்தது. இப்படத்திற்காகத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஓரளவு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது “கங்கா கங்குவா” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:தியேட்டரில் மாஸ் காட்டும் புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?