5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘கங்குவா’ படத்திலிருந்து வெளியான “தலைவனே”லிரிக்கல் பாடல்!

Thalaivane : தமிழ் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கங்குவா. க்ரீன் ஸ்டுடியோ மற்றும் யுவி க்ரியேஷன் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாபி தியோல்,ஜெகபதி பாபு, திஷா பதானி, கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நட்டி நடராஜன் சுப்பிரமணியன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 30 Oct 2024 08:44 AM

கங்குவா திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யாவின் 43வது திரைப்படமான இதில் இவருக்கு ஜோடியாக இந்தி பிரபல நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய நடிகர்களாக பாபி தியோல், யோகிபாபு, கோவை சரளா, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், கே.எஸ்.ரவிக்குமார் , ஜெகபதி பாபு எனப் பலரும் நடித்துள்ளனர். சூர்யாவின் நடிப்பில் அமையும் மிகப் பிரம்மாண்ட திரைப்படமான இது வட இந்தியாவில் மட்டுமே சுமார் 3500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யா சுமார் 13 தோற்றங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். முழுவதும் 3டி காட்சிகளைக் கொண்டு உருவாகிவரும் இந்த திரைப்படமானது வருகின்ற நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலான “தலைவனே” என்ற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Latest Stories