5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகர் டோவினோவின் ‘ARM’ படத்திலிருந்து “அந்தி வானில்” பாடல்!

Andhi Vaanil : மலையாள இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் உருவான பிளாக் பஸ்டர் திரைப்படம் ஏ.ஆர்.எம். மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் இத்திரைப்படமானது டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்களான டோவினோ தாமஸ், கீர்த்தி செட்டி , ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து "அந்தி வானில்" என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 30 Sep 2024 08:06 AM

மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஏ.ஆர்.எம். இத்திரைப்படத்தை மலையாள இயக்குனர் ஜிதின் லால் இயக்க, இப்படத்தை லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் சகரியா தாமஸ் இருவரும் இணைந்து”மேஜிக் பிரேம்ஸ் ” என்ற நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படத்தில் முன்னணி நடிகர்களான டோவினோ தாமஸ், கீர்த்தி செட்டி , ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த 8வது மலையாளப் படமாக அமைந்ததுள்ளது. இத்திரைபடத்திற்காக திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் தற்போது தமிழில் வெளியான பாடல் தான் “அந்தி வானில்”, இந்த பாடலின் மலையாள மாதிரி பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த பாடலை தமிழில் படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us
Latest Stories